உலகளவில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கும் பொன்னியின் செல்வன்.. ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள் லிஸ்ட் இதோ!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஓவர்சீஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயற்சி செய்த நிலையில், மணிரத்னம் அதை சாதித்துக்காட்டி உள்ளார்.

பொன்னியின் செல்வன் புத்தகம், நாடகம் எப்போது வந்தாலும் அதற்கு ஒரு பெரிய வரவேற்பு தமிழ் மக்களிடம் உள்ளது.

டிரைலருக்கு பிறகு

டிரைலருக்கு பிறகு

பொன்னியின் செல்வன் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படம் மிரட்டலாக உள்ளதே என கொண்டாட துவங்கி விட்டனர். வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பை காணவே ரசிகர்கள் வெயிட்டிங்.

சூடு பிடித்த பிசினஸ்

சூடு பிடித்த பிசினஸ்

பொன்னியின் செல்வன் ஓவர்சீஸ் பிசினஸ் அதன் டிரைலருக்கு பின்னர் சூடு பிடித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏகப்பட்ட பெரிய விநியோகஸ்தர்கள் பெரும் தொகை கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தை வாங்கி உள்ளனர். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

மலேசியாவில்

மலேசியாவில்

லோட்டஸ் ஃபைவ்ஸ்டார் எனும் பெரிய நிறுவனம் மலேசியாவில் பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமாக வெளியிட முன் வந்துள்ளன. தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் இருக்கும் மலேசியாவில் நிச்சயம் பொன்னியின் செல்வன் படத்திற்உ பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் வசூல் வேட்டை நடத்துவது உறுதி.

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில்


மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரில் ஹோம் ஸ்க்ரீன் என்டர்டெயின்மென்ட் எனும் பெரிய நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம். சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், படத்தின் பிசினஸ் வேறலெவலுக்கு சென்றுள்ளதாம்.

கமல் வாய்ஸ்

கமல் வாய்ஸ்

பொன்னியின் செல்வன் டிரைலரில் கமல்ஹாசனின் கம்பீரக் குரல் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் என சொல்லும் தொனியே ஏகப்பட்ட விநியோகஸ்தர்களை இந்த படத்தை வாங்க போட்டிப் போட வைத்துள்ளது. ஏற்கனவே விக்ரம் படம் ஓவர்சீஸில் சக்கைப் போடு போட்ட நிலையில், பொன்னியின் செல்வனும் வசூல் சாதனை படைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சரிகமா சினிமாஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கனடாவில்

கனடாவில்

சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் ஒரு தெருவுக்கே அவரது பெயரை வைத்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு அங்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X