பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? ஹாட் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த மாதம் முழுவதுமே அந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை லைகா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்கிற ஹாட் அப்டேட்டை லைகா நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருக்கும் இரண்டாம் பாகத்தின் கதைக்கு முக்கியமான போஸ்டர் உடன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்கியின் நாவல்

கல்கியின் நாவல்

ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி அமரர் கல்கி எழுதிய புனைவு நாவல் தான் பொன்னியின் செல்வன். பொன்னி நதியில் தவறி விழும் அருள்மொழி வர்மனை பொன்னித்தாயே தூக்கிக் கொடுத்தாள் என்கிற கதைக் காரணமாக பொன்னியின் செல்வன் என்கிற பெயர் உண்டானது. ஆனால், அது பொன்னி நதி அல்ல ஊமை ராணி என்பதை உணர்த்தும் இடங்கள் எல்லாம் கதையை படிக்கும் போதே ரசிகர்களுக்கு புல்லரிக்கும் விதமாக கல்கி ஒவ்வொன்றையும் பிரம்மாண்ட காட்சிகளாகவே வர்ணித்து எழுதி இருப்பார்.

பலரது கனவு

பலரது கனவு

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினிகாந்த், ராஜமெளலி என பல ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என நினைத்த நிலையில், கடைசியாக இயக்குநர் மணிரத்னம் அந்த கனவை தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு சாத்தியம் ஆக்கினார். முதல் பாகம் அமோக வசூலை வாரிக் குவித்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.

முதல் பாடல் பெற்ற வரவேற்பு

முதல் பாடல் பெற்ற வரவேற்பு

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அகநக பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது. குந்தவரை த்ரிஷாவுக்கும் வந்தியத்தேவன் கார்த்திக்கும் இடையே நடக்கும் காதல் பாடலாகவே அந்த பாடலை வடிவமைத்துள்ளனர். சக்திஸ்ரீ கோபாலன் குரலில் காதில் தேன் வந்து பாய்வதை போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து வருகின்றனர்.

ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ

ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் ரிலீஸ் வரும் மார்ச் 29ம் தேதி என்கிற அமர்க்களமான அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் அடங்கிய புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. Fire in their eyes. Love in their hearts. Blood on their swords. The Cholas will be back to fight for the throne! என்கிற கேப்ஷனையும் கொடுத்திருக்கின்றனர்.

விழா இருக்குமா

விழா இருக்குமா

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அந்த தேதியில் இருக்குமா அல்லது வெறுமனே பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை மட்டும் டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டு விடுமா லைகா என்கிற கேள்வியும் தற்போது பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரியளவில் ப்ரோமோஷன் செய்தால் தான் முதல் பாகத்தை போலவே இந்த பாகமும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X