PS2 :இந்த ஆண்டில் அதிகமாக வசூலித்த தமிழ்ப்படம்.. உயரமாக பறக்கும் சோழர் கொடி!

சென்னை :மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் அதிகமான வசூலையும் ஈட்டியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் வசூல் தற்போது 350 கோடிகளை சர்வதேச அளவில் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 120 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது. படத்தின் வசூல் குறித்து லைகா அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு வருகிறது.

Lyca announces PS2 movie is the highest grossing tamil film of the year

இந்த ஆண்டில் அதிகமாக வசூலித்த தமிழ்ப்படம் பொன்னியின் செல்வன் 2 : மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு ப்ராஜெக்ட்டாக கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் பல்வேறு தரப்பினரின் முயற்சிகளை தாண்டி மணிரத்னத்திற்கு சாத்தியப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களான கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க இந்தப் படம் வெளியானது.

படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. தமிழில் இத்தகைய முயற்சிகள் குறைவு என்பதாலேயே இந்தப் படத்தை ரசிகர்கள் வியப்புடன் பார்த்தனர். படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், முதல் பாகம் அளவிற்கு இரண்டாவது பாகம் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இருந்தபோதிலும் படம் வசூலை குவிக்க தவறவில்லை.

Lyca announces PS2 movie is the highest grossing tamil film of the year

இந்தப் படம் கடந்த 28ம் தேதி வெளியான நிலையில், தற்போதுவரை சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய்களை படம் குவித்துள்ளது. இதேபோல தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த ஆண்டில் வெளியான தமிழ்ப்படங்களில் அதிகமாக வசூலித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2 என்று லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சோழர்களின் கொடி உயரமாக பறந்து வருவதாக லைகா பெருமிதம் தெரிவித்துள்ளது. படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்யுமாறும் லைகா கேட்டுக் கொண்டுள்ளது. இதையொட்டி அதிகமாக வசூலித்த படம் என்ற வீடியோ ஒன்றையும் லைகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக 300 கோடி ரூபாய் வசூலை எட்டியபோதும் லைகா, அப்டேட் தெரிவித்திருந்தது.

நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் அந்த கேரக்டர்களுக்கான பிம்பத்தை அவர்கள் ரசிகர்களுக்கு சிறப்பாக கொடுத்துள்ளனர். படத்திற்கான பிரமோஷன்களையும் சிறப்பாக செய்திருந்தனர். செனனையில் துவங்கி, டெல்லி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் தங்களது பிரமோஷனல் டூரை சிறப்பாக நடத்தினர். இவை இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகமாக ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X