பொன்னியின் செல்வன் நடிகருக்கு சம்பள பாக்கி.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. ‘லைகா‘ செய்தது அநியாயம்!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகருக்கு பல பஞ்சாயத்திற்கு பிறகு லைகா நிறுவனம் சம்பளத்தை கொடுத்துள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்தது. இதில் விக்ரமன்,கார்த்தி,ஜெயம் ரவி,திரிஷா, ஜஸ்வர்யா ராய், பிரபு, நாசர், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கி உள்ளார். இதில் முதல் பாகம் வெளியாகி சக்கை போட்டது. இதில் நயவஞ்சகியாக வரும் நந்தினி சோழர்களை பழிவாங்க 74 வயது முதியவரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு ராஜ்ஜியத்தை கைப்பற்ற தந்திரமாக காய்களை நகர்த்தி வருகிறார் நந்தினி.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்
ஆதித்த கரிகாலன் காதல் விவகாரம் தெரிந்ததும் அரண்மனையை விட்டு வெளியேறிய நந்தினி எங்கு சென்றாள். வீரபாண்டியனுடன் அந்த குடிசையில் ஏன் இருந்தார், பாண்டியர்களுக்கு அவர் உதவி செய்ய என்ன காரணம், அந்த ஊமைப்பெண் யார் என்ற பல கேள்விகளுடன் முதல்பாகம் முடிந்தது. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சம்பளம் தரவில்லை
பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் குடந்தை ஜோதிடர், இந்த கதாபாத்திரம் குறித்து கதையில் பல இடங்களில் பலரும் பேசி இருப்பார்கள். இந்த குடந்தை ஜோதிடர் கேரக்டரில் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்து இருந்தார். படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆனால்,படத்தில் நடித்ததற்காக அவருக்கு எந்தவிதமான சம்பளமும் தரவில்லை.

லைகா செய்தது அநியாயம்
இதை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டு, அவருக்கான சம்பளத்தை லைகா நிறுவனம் வழங்கவில்லை என கூறியிருந்தார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளானதை அடுத்து, லைகா நிறுவனம் ஜோதிடர் வேடத்தில் நடித்த காத்தாடி ராமமூர்த்திக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும் லைகா சம்பளத்தை கொடுக்காதது அநியாயம் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











