பைரசி தளங்களுடன் தொடர்பா..? - லைகா நிறுவனம் விளக்கம்!
சென்னை : ஆன்லைன் சினிமா பைரசி தளங்களை லைகா நிறுவனம் தான் நடத்துவதாகவும், லைகா நிறுவனத்தின் படங்களில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடித்து அதை ஊக்கப்படுத்துவதாகவும் சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி தளங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. லைகா நிறுவனத்தின் இணையதளம் தொடங்கப்பட்ட தேதியையும், ஆன்லைன் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தேதியையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர்.

ஆதாரமின்றி குற்றம்சாட்டிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லைகா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், லைகா நிறுவனம் எப்போதும் திரையுலகத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications