விடாமுயற்சியால் லைகாவுக்கு ரூ.127.5 கோடிகள் நஷ்டம்.. அஜித் சம்பளத்துக்கு மட்டும் 50 கோடி வட்டி!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. இந்த படம் வணிக ரீதியாக படுதோல்வி படமாக மாறியது. ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. காரணம் படத்தில் மாஸ் டயலாக்குகள் அல்லது மாஸான காட்சிகளோ கூட இல்லை. இப்படியான காட்சிகள் இல்லை என ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தாலும் அஜித் ரசிகர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல், படம் பார்க்க வந்ததாலோ என்னவோ, படம் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அது வசூலிலும் எதிரொலித்ததால், படம் தோல்வி படமாக மாறியது. விடாமுயற்சி படத்தின் லாப நஷ்ட கணக்கு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 280 கோடிகள். இதில் அஜித் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் என சம்பளத்திற்கு மட்டும் மொத்தம் ரூபாய் 140 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது.

Ajiithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Box Office

படத்தின் தயாரிப்புக்கு ரூபாய் 60 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், அஜித்தின் சம்பளத்திற்கு வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் ரூபாய் 50 கோடிகள், மற்றவைகளுக்கு வாங்கிய பணத்திற்கு வட்டி ரூபாய் 20 கோடிகளும் என வட்டி மட்டும் ரூபாய் 70 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூபாய் 10 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ரூபாய் 280 கோடிகள் செலவில் படத்தை லைகா நிறுவனம் உருவாக்கியது தெரியவருகிறது.

Ajiithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Box Office

விடாமுயற்சி: படம் ரிலீஸ்க்கு முன்னர் நடைபெற்ற வியாபரத்தில் மொத்தம், ரூபாய் 156 கோடிகள் வியாபாரம் ஆகியுள்ளது. இதனால் படம் ரிலீஸ்க்கு முன்னர் லைகாவுக்கு ரூபாய் 124 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை அவர்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார்கள். இப்படியான நிலையில் படம் தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி மொத்தம் வசூல் செய்த தொகை ரூபாய் 81 கோடிகள். இதில், லைகா நிறுவனம் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 3.5 கோடிகள் ரிலீஸ் ஷேர் போக, ஷேராக கிடைத்தது, ரூபாய் 31.5 கோடிகள்.

Ajiithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Box Office

ஷேர்: தமிழ்நாடு உடன் சேர்த்து இந்தியா முழுவதும் 97.43 கோடிகளும் வெளிநாடுகளில் ரூபாய் 40 கோடிகளும் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டு வசூல் மூலம் கிடைத்த ஷேர் ரூபாய் 14 கோடிகள். மொத்தம் கிடைத்த ஷேர் மட்டும் ரூபாய் 48 கோடிகள். இதில் விநியோகஸ்தர்களுக்கு திருப்பித் தந்த தொகை, ரூபாய் 34 கோடிகள். இதன் மூலம் லைகாவின் கையில் ஷேரில் மீதம் இருந்த தொகை ரூபாய் 14 கோடிகள்.

Ajiithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Box Office

நஷ்டம்: படம் ரிலீஸ்க்கு முன்னர் லைகாவுக்கு இருந்த நஷ்டத் தொகை, ரூபாய் 124 கோடிகளில் ரிலீஸ்க்குப் பின்னர் வந்த ஷேர் ரூபாய் 14 கோடிகளைக் கழித்தால், நஷ்ட தொகையாக ரூபாய் 110 கோடிகள். இது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் கதை பாரமவுண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதை என்பதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் ரூபாய் 17.5 கோடிகள். இதனால் மொத்தம் நஷ்டத் தொகை ரூபாய் 127.5 கோடிகளாக வந்து நிற்கிறது. விடாமுயற்சி படத்தின் வரவு செலவு மற்றும் வசூல் கணக்கு தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி வீடியோ வெளியிட்டுள்ளார். அஜித்தை வைத்து படமெடுத்த லைகாவுக்கு இவ்வளவு நஷ்டமா என தமிழ் திரையுலகில் பலரும் அதிர்ச்சியோடு இது தொடர்பாக பேசி வருகிறார்கள்.

Ajiithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Box Office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X