ஷங்கரை விடாமல் விரட்டும் லைகா.. ஹைத்ராபாத் ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது!

சென்னை: இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் ஹைத்ராபாத் ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். கமல் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அந்நியன் ரீமேக்

அந்நியன் ரீமேக்

சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார். இதேபோல் தெலுங்கில் ராம்சரணை வைத்தும் படம் இயக்குகிறார் ஷங்கர்.

Recommended Video

Sura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil
லைகா வழக்கு

லைகா வழக்கு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஹைத்ராபாத் ஹைகோர்ட்

ஹைத்ராபாத் ஹைகோர்ட்

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான வழக்கு

சென்னை ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஹைத்ராபாத் ஹைகோர்ட்டிலும் லைகா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X