'2.O' தாமதம்... கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அக்‌ஷய்குமார் நடித்து வரும் படம் '2.ஓ'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் அக்ஷய்குமார் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ரஜினியும் சில கெட்டப்புகளில் தோன்றுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்பட்ட '2.ஓ' ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருப்பதற்கு காரணம் படத்தின் ஃகிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததே ஆகும்.

2.ஓ

2.ஓ

'2.ஓ' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மாதக்கணக்கில் நடந்து வரும் நிலையில், 2018 ஜனவரியில் 2.ஓ படம் திரைக்கு வருவதாக கூறப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்போது ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு மாற்றி விட்டனர்.

கிராஃபிக்ஸ் பணி

கிராஃபிக்ஸ் பணி

இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே ரூ. 100 கோடி ஒதுக்கியிருக்கிறார்களாம். அசத்தலான கிராஃபிக்ஸ் வேலைகளால் ரசிகர்களை ஆச்சரியப்படச் செய்யவேண்டும் என பார்த்து பார்த்து உழைக்கிறார்களாம்.

தாமதத்திற்கு காரணம்

தாமதத்திற்கு காரணம்

மேலும், 2.ஓ படம் இப்படி தாமதமானதற்கு முழுக்காரணம் VFX நிறுவனம்தானாம். அதனால் இந்த தாமதத்திற்காக அந்த நிறுவனம் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

2.O' படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்பு கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருப்பதால், டீசர், ட்ரெய்லர் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டீசர் ரிலீஸ்

டீசர் ரிலீஸ்

'2.O'ரிலீஸ் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போயிருப்பதால் டீசரை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ட்ரெய்லர் ரிலீஸ்

ட்ரெய்லர் ரிலீஸ்

படத்தின் ட்ரெய்லரை மார்ச் மாதம் வெளியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ரிலீஸ் செய்யப்படும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X