ஆளவிடுங்க அஜித்.. விடாமுயற்சியில் இருந்து விலகுகிறதா லைகா? பரபரக்கும் கோலிவுட்.. என்ன ஆகுமோ?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் எந்த முயற்சியும் அஜித் தரப்பில் இருந்து செய்யவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் விடாமுயற்சி ப்ராஜெக்ட்டையே கைவிடப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஹாட்ரிக் அடித்த அஜித் அடுத்து லைகா நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Lyca got upset with Vidamuyarchi delay and they plans to leave the project also?

ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இயக்குநர் என அறிவித்த லைகா நிறுவனம் அஜித்துக்கு கதை பிடிக்காத நிலையில், இயக்குநரை மாற்றி மகிழ் திருமேனியை கொண்டு வந்தது.

ஆரம்பிக்காத அஜித் படம்: அனால், மகிழ் திருமேனியை இயக்குநராக அறிவித்தும் பல மாதங்களாக எந்தவொரு முன்னேற்றமும் முயற்சியும் அந்த படம் தொடங்குவதற்கு சாதகமாக இருப்பதாக தெரியாத நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா கடும் அப்செட் ஆகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக அதிலும் 2 பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பையே 3 மாதத்துக்குள் மணிரத்னம் முடித்துக் கொடுத்து விட்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கிய லால் சலாம் ஷூட்டிங்கும் முடிந்து விட்டது. பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 மற்றும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமே ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், விடாமுயற்சி மட்டும் இன்னமும் ஸ்டார்ட்டே ஆகவில்லை.

விலகவே முடிவெடுத்த லைகா: இந்நிலையில், சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக ஆரம்பித்து விடலாம் என இந்த வாரம் காத்துக் கிடந்த லைகாவுக்கு மீண்டும் அஜித் தரப்பில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக மேலும், தாமதமாகும் என சென்ற தகவலால் கடுப்பாகி படத்தில் இருந்தே லைகா நிறுவனம் விலகப் போவதாக பரபரப்பு தகவல்கள் கோடம்பாக்கத்தையே பற்றிக் கொண்டன.

Lyca got upset with Vidamuyarchi delay and they plans to leave the project also?

ஆனால், ஏகே 62 அறிவிப்பை வெளியிடும் போதே 65 கோடிக்கு விடாமுயற்சியின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்று விட்ட நிலையில், உடனடியாக அஜித் படத்தில் இருந்து விலக முடியாமல் லைகா நிறுவனம் சிக்கித் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

அடுத்த மாதத்திற்குள் அஜித் படம் ஆரம்பிக்கவில்லை என்றால், மொத்தமாகவே லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிவிடும் என்கிற எச்சரிக்கையும் அஜித் தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X