Vidaamuyarchi - ஹீரோயினை தேடுவதில் விடாமுயற்சி.. யார் நடிக்கப்போகிறார்?.. இதோ லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படத்திற்கு ஹீரோயின் தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறதென்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். வாரிசுடன் களமிறங்கி துணிவு வெற்றி பெற்றதால் தனது 62ஆவது படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Lyca is going to talk to five people to play the heroine in Vidaamuyarchi

கதைக்கு லேட் ஆனது: இதனை அஜித்குமார் மகிழ் திருமேனியிடமும் கூறியதாகவும் அதனையொட்டிதான் கதையை உருவாக்குவதற்கு அவர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் படத்தின் பெயரான விடாமுயற்சிக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்க, மகிழ் திருமேனியின் கதையும், மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

வேர்ல்ட் டூர்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை சமீபத்த்லி தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் கடந்த 8ஆம் தேதியோடு பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அஜித் இதுவரை எங்கெங்கு பைக்கில் சென்றிருக்கிறார் என்ற புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

நவம்பர்வரை ஷூட்டிங்தான்: இந்தச் சூழலில் மே 22ஆம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையொட்டிதான் அஜித் முதல் கட்ட பயணத்தை முடித்து திரும்பியிருக்கிறார் என தெரிகிறது. சென்னையில் ஆரம்பிக்கும் முதல் ஷெட்யூலில் அஜித் கலந்துகொள்வார் எனவும், தொடர்ந்து 40 நாள்கள் ஷூட்டிங் நடத்த இயக்குநர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.

யார் ஹீரோயின்?: விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும், ஹீரோயின் குறித்தும் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகிருக்கிறது. அதன்படி, விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்க ஐநது கதாநாயகிகளில்டம் பேச்சுவார்த்தை நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.

பாலிவுட் 4, கோலிவுட் 1: அதன்படி பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கத்ரீனா கைஃப், கங்கனா ரணாவத் ஆகியோரிடமும், கோலிவுட்டில் இப்போது மீண்டும் பீக்கிற்கு வந்திருக்கும் த்ரிஷாவிடமும் பேச்சுவார்த்தை நடத்துவது லைகாவின் ப்ளான் என கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரில் எந்த ஹீரோயின் ஒத்துவருகிறாரோ அவர்தான் விடாமுயற்சி ஹீரோயினாம்.

Lyca is going to talk to five people to play the heroine in Vidaamuyarchi

ஐஸ்வர்யா ராயுடன் ஏற்கனவே அஜித் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் த்ரிஷாவுடன் ஜி, கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக விடாமுயற்சியில் த்ரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X