கரைந்த கோடிகள், வெடிக்கும் கேள்விகள்.. கமல் லைக்காவை குழப்புகிறாரா?

By Staff

Recommended Video

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நிறுத்தி வைத்த கமல்- வீடியோ

சென்னை: தமிழக சினிமா இன்டஸ்ட்ரியில் சிங்கிள் சிங்கமாக நின்று விளையாடிக் கொண்டிருக்கிறது லைக்கா சினிமா தயாரிப்பு நிறுவனம். ரஜினி, கமல், விஜய் என்று பெரிய பெரிய மாஸ் நடிகர்களை வைத்துத்தான் தொடர்ந்து படங்களை தயாரித்து தள்ளிக் கொண்டிருக்கிறது.

அந்நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்த 2.O பெரிதாய் ஓடவில்லை என்றாலும் கூட வர்த்தக ரீதியில் செம்ம கலெக்‌ஷனை பார்த்துவிட்டது அந்நிறுவனம். அந்த வகையில் மீண்டும் மீண்டும் ரஜினியையே கேட்கிறது தங்களுக்கு நடித்துக் கொடுக்க. அந்தளவுக்கு அவரது பிஸினஸ் க்ளியராய் இருக்கிறதாம்.

ஆனால் அதே வேளையில் கமல்ஹாசன் விஷயத்தில் அந்நிறுவனம் பெரிய அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர். காரணம், கமலுடன் அவர்கள் போட்ட ப்ராஜெக்ட்டுகள் தொடர்ந்து சொதப்புவதுதான்.

நாயுடுவால் குழப்பம்

நாயுடுவால் குழப்பம்

தசாவதாரத்தின் பத்து கேரக்டர்களில் செம்ம ஹிட் அடித்தது ‘நாயுடு' கேரக்டர்தான். எனவே அதை தனியே எடுத்து ‘சபாஷ் நாயுடு' எனும் பெயரில் தனி படத்தை உருவாக்கினார் கமல். அதை இந்த நிறுவனம்தான் தயாரித்தது. பாதி வளர்ந்த நிலையில், கமலுக்கு காலில் அடிபட, படம் டிராப் ஆகிவிட்டது.

இந்தியன் 2விலும் குழப்பம்

இந்தியன் 2விலும் குழப்பம்

அதன் பிறகு ஷங்கர் இயக்க, இதே நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்க ‘இந்திய - 2' அறிவிக்கப்பட்டது. பூஜை போட்டு படம் துவங்கிய நிலையில், கமலின் வயதான கெட் - அப் மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லை, கமல் தேர்தலை நோக்கி நகர்ந்துட்டார்... என்று படம் முடங்கியது. அதற்கு கொட்டப்பட்ட சில கோடிகளின் நிலை கவலைக்கிடமாகி கிடக்கிறது. இதோ ரெடி, அதோ ரெடி என்று கிளப்பப்படும் அந்த படம் இன்னும் எழவில்லை.

தலைவன் தான் இருக்கிறானே

தலைவன் தான் இருக்கிறானே

இந்த நிலையில்தான் 'சபாஷ் நாயுடு' இழப்பை ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க சொல்லி கமல்ஹாசனிடம் பேசியது அந்நிறுவனம். அதன்படி தன் கைவசமிருக்கும் ‘தலைவன் இருக்கிறான்' படக்கதையை சொன்னார் அவர். கமல் புதிதாய் அரசியலுக்கு வந்துள்ளார்! எனவே இந்த படம் எடுபடும், வசூலை அள்ளும்! என்று எண்ணி அந்நிறுவனமும் ஓ.கே. சொல்லி முதலீடு செய்ய முன்வந்திருக்கிறது. இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கேட்ட கமல், அவரை சந்தித்து ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.

கிணற்றில் போட்ட கல்

கிணற்றில் போட்ட கல்

ஆனாலும் ‘தலைவன் இருக்கிறான்' பட உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை என லைக்கா தரப்பில் வருத்தம், முணுமுணுப்பாம். என்னதான் பிரச்னை என கோடம்பாக்க பி.ஆர்.ஓ.க்கள் சிலரிடம் கேட்டால் "தலைவன் இருக்கிறான் கதையை பண்ணவா? அல்லது மிக பெரியளவில் ஹிட்டடித்த எனது தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை பண்ணவா! என்று கமல் இப்போது சந்தேகம் கிளப்பி, இழுத்தடிப்பதாக அந்நிறுவனத்தை சேர்ந்த சிலர் டென்ஷனாகிறார்கள்.

இப்படி குழப்பினால் எப்படி

இப்படி குழப்பினால் எப்படி


கமலை மையமாக வைத்து மூன்று படங்களுக்கு இன்வெஸ்ட் செய்து, பல கோடிகளை கொட்டிவிட்ட நிலையில் ஒரு படம் கூட உருப்படியாய் உருவாகவில்லையே! அப்படின்னு அந்நிறுவனத்தின் உரிமையாளர் செம்ம டென்ஷனில் இருக்கிறார்." என்கிறார்கள். ஆனால் கமல்ஹாசன் தரப்பிலோ ‘எந்த பிரச்னையுமில்லை. புதுப்படத்துக்கான கதை விவாதம், ஸீன் மேக்கிங், டயலாக் உள்ளிட்ட எல்லாமே சிறப்பா வளர்ந்துட்டு இருக்குது. எல்லாமே பக்கா. தயாரிப்பு தரப்பும் கமல் சார் மேலே ரொம்ப ஹேப்பி. நம்பினவர்களை என்னைக்குமே கைவிடமாட்டார் கமல் சார். அது சினிமாவானாலும் சரி, அரசியலானாலும் சரி." என்கின்றனர்.

அது சரி எந்தப்படம் பக்காவா உருவாகுது? தலைவன் இருக்கிறானா! அல்லது தேவர் மகன் 2-வா? அதைச் சொல்லுங்க பாஸு.

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X