சீமான் இயக்கத்தில் சிம்பு.. ஒன்றல்ல 3 படமாம்... தயாரிப்பு யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

சிம்பு சீமான் இணையும் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை: சிம்புவை வைத்து சீமான் மூன்று படங்கள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் சீமான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் குறித்து காரசாரமாகப் பேசினார். அதோடு, தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் சிம்பு தான் என்றும், அவரை வைத்து படங்கள் இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Lyca to produce Simbu - Seeman film?

முதலில் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் தவறானது என்றும், சீமான் -சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பு என்பதால் இப்படம் பிரம்மாண்டமானதாக உருவாக்கப்படும் என்ற பேச்சும் உள்ளது. அதோடு சிம்புவின் சம்பளமும் இப்படம் மூலம் மேலும் பல கோடிகள் கூட இருக்கிறதாம்.

சிம்புவை வைத்து சீமான் ஒரு படமல்ல, 3 படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த மூன்று படத்தையுமே லைகாதான் தயாரிக்கிறது என்கிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை எந்தத் தகவலும் நம்புவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X