Lyca productions: அதெல்லாம் போலி.. நம்பாதீங்க.. எச்சரிக்கை கொடுத்த லைகா நிறுவனம்!

சென்னை: முன்னணி இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டவர்களை கொண்டு மிகவும் பிரம்மாண்டமான படங்களை தயாரித்துள்ள நிறுவனம் லைகா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் -கமல்ஹாசன் கூட்டணியில் லைகா தயாரிப்பில் வெளியானது இந்தியன் 2 படம். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனிடையே, அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்களை தயாரித்துள்ளது லைகா நிறுவனம். இந்த படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Lyca productiions Vettaiyan movie Actor Rajinikanth

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்: பிரபல இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த பிரம்மாண்டமான படங்களை கொடுத்து வருகிறது லைகா நிறுவனம். லைகா நிறுவன தயாரிப்பாக கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது இந்தியன் 2 படம். கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்கள் லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ளது.

வேட்டையன் & விடாமுயற்சி படங்கள்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தொடர்ந்து இது குறித்த கேள்விகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதேபோல அஜித்தின் விடாமுயற்சி படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ஆக்ஷன் களத்தில் ரோட் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லைகா புதிய அறிவிப்பு: இந்நிலையில் லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் தற்போது லைகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது நிறுவனத்தின் பெயரில் நடிகர்கள் தேர்வு குறித்த போலி விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதாக தங்களது கவனத்திற்கு தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைகா தெரிவித்துள்ளது. லைகா ப்ரொடக்ஷன் என்ற பெயரில் பல அதிகாரப்பூர்வமற்ற நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.

சட்டப்படி நடவடிக்கை: தங்களது நிறுவன தயாரிப்பின் கீழ் நடத்தப்படும் படங்களுக்கான காஸ்டிங் கால்கள் அல்லது ஆடிஷன்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு இல்லாமல் வரும் காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்களை புறக்கணிக்குமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் நபர்கள் அல்லது ஏஜென்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கைக்கொடுக்குமா வேட்டையன்& விடாமுயற்சி?: தொடர்ந்து கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், காப்பான், தர்பார், டான் பொன்னின் செல்வன் 1 மற்றும் 2 என படங்களை கொடுத்துள்ள லைகா நிறுவனத்திற்கு பொன்னியின் செல்வன் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்கள் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X