டான் அப்டேட் இல்லை.. அதை விட பெருசு.. ராஜமெளலி உடன் கைகோர்த்த லைகா நிறுவனம்.. என்னன்னு பாருங்க!

சென்னை: சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று 4 மணிக்கு பெரிய அப்டேட் வெளியிடப் போகிறோம் என லைகா நிறுவனம் கூறியதும், டான் படம் தொடர்பான அப்டேட்டாக இருக்கும் என்றே பலரும் கருதினர்.

இல்லையென்றால், இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பா? அல்லது பொன்னியின் செல்வன் பற்றிய அறிவிப்பா என நினைத்து கொண்டிருக்கையில், தற்போது எதிர்பார்த்ததை விட பெரிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அப்படி என்ன அப்டேட்

அப்படி என்ன அப்டேட்

இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பைத் தான் தற்போது அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தொடர்ந்து ராஜமெளலியின் ரசிகர்களும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த பிரம்மாண்டம்

அடுத்த பிரம்மாண்டம்

பாகுபலி படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நாயகியாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டான் படத்தில் இருந்து சர்ப்ரைஸ் ஆன ஏதாவது ஒரு அறிவிப்பு வரும் என்றும், இல்லை என்றால் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆவது ரிலீஸ் ஆகும் என நினைத்த கோலிவுட் ரசிகர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சிவாவுடன் இணைந்த சூரி

சிவாவுடன் இணைந்த சூரி

இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி, மீண்டும் காமெடியனாக டான் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்துள்ள அறிவிப்பை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக இன்று வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் வெளியான அத்தனை படங்களிலும் காமெடி களைகட்டிய நிலையில், டான் படத்திலும் அது நிறையவே இருக்கும் என்றே தெரிகிறது.

கேக் கட்டிங்

கேக் கட்டிங்

டான் படக்குழுவினருடன் கேக் கட்டிங் செய்து தனது பிறந்தநாளை நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடியுள்ள புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பால சரவணன், குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X