கோலே...Celebration Anthem உடன் ஆர்ஆர்ஆர் கொண்டாட்டத்தை துவக்கிய லைகா

சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவால் Celebration Anthem வெளியிட்டு, கொண்டாட்டத்தை துவக்கி வைத்துள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ். இதனை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். பீரியாடிக் ஆக்ஷன் படமான இந்த படத்தை டிவிவி என்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் கதை இது தானா

ஆர்ஆர்ஆர் கதை இது தானா

ஐதராபாத்தை சேர்ந்த அல்லுரி சீத்தாரா ராஜு, கோமரம் பீம் ஆகியோர் பிரிட்டிஷ் ராஜ்யத்தையும் ஐதராபாத் நிஜாமையும் எதிர்த்து போராடுவது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசாக உள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ், பென் ஸ்டூடியன்ஸ், தமீன் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை விநியோகம் செய்கின்றன.

எதரி்பார்ப்பை கிளப்பிய டிரைலர்

எதரி்பார்ப்பை கிளப்பிய டிரைலர்

ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படம் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 25 ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு உள்ளிட்ட பாடல்கள், டீசர், டிரைலர் ஆகியன ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் மீண்டும் ப்ரொமோஷனை துவக்கி உள்ளன விநியோக நிறுவனங்கள்.

ஆர்ஆர்ஆர் celebration anthem

ஆர்ஆர்ஆர் celebration anthem

ஆர்ஆர்ஆர் ரிலீஸ் கொண்டாட்டத்தை Celebration Anthem ப்ரொமோ வெளியிட்டு துவக்கி வைத்துள்ளது லைகா நிறுவனம். கோலே என துவங்கும் இந்த பாடலில் ராம்சரண், ஆலியா பட், ஜுனியர் என்டிஆர் மூவரும் ஆடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 14 ம் தேதி RRR Celebration Anthem முழு பாடல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ப்ரொமோ வீடியோவே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர்

2020ம் ஆண்டு ஜுலை மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய படம் ஆர்ஆர்ஆர். கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களில் அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய மொழிகளில் மட்டுமின்றி சில வெளிநாட்டு மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஐமேக்ஸ், 3டி, டோல்பி சினிமா ஆகியவற்றிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X