கண்ணீரில் டெல்டா.. அள்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி!

கஜா புயல் நிவாரண நிதிக்காக லைகா ரூ. ஒரு கோடி வழங்கியுள்ளது.

Recommended Video

அள்ளிக் கொடுத்த லைகா | நிதியுதவி வழங்கிய நடிகர்கள் லிஸ்ட்- வீடியோ

சென்னை: கஜா புயல் நிவாரண நிதியாக லைகா நிறுவனம் ரூ. ஒரு கோடியும், இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

கடந்த வாரம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு திரையுலகைக் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

Lyca Productions give huge amount for Gaja Cyclone Relief

அந்த வகையில் ரஜினி ரூ. 50 லட்சம், விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம், சூர்யா குடும்பம் ரூ. 50 லட்சம் என திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் கஜா நிவாரண நிதிக்காக ரூ. 10 லட்சம் அளித்துள்ளார். கூடவே, ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதேபோல், கஜா புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக, முதலமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்தை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. இயக்குனர் ஷங்கரும் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை அளித்துள்ளார்.

Lyca Productions give huge amount for Gaja Cyclone Relief

பாடலாசிரியர் வைரமுத்துவும் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதோடு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை விரைவாக செய்யுங்கள் என டிவிட்டர் வாயிலாக அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X