செலவில் கறார் காட்டும் லைக்கா… இதுக்கெல்லாமா கணக்கு பார்ப்பது… கடுப்பான வடிவேலு !
சென்னை : வைகை புயல் வடிவேலுவுக்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வரவு செலவு கணக்கில் லைக்கா நிறுவனம் கறார் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், வடிவேலு ஏகத்திற்கும் டென்ஷனாகி தாட்பூட் என கத்தியுள்ளார்.
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்ஸி , முனிஸ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

நாய்சேகர் ரிட்டன்ஸ்
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வடிவேலு பிரவுதேவா கூட்டணி
இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ஆரம்ப கால பாடல்கள் மற்றும் நடனம் வெகு பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள பாடல் மற்றும் நடனம் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கடுப்பான லைக்கா
நாய்சேகர் ரிட்டன்ஸ் கதைப்படி வடிவேலு மிகப்பெரிய கோடீஸ்வரராம், இதற்காக மைசூர் அரண்மனையில் முகாமிட்டுள்ள படக்குழு, மாளிகை போன்ற செட் ஒன்றை வீடு போல அமைத்துள்ளனர். இதனால், படத்திற்கு போடப்பட்ட பட்ஜெட்டை மீறி கோடிக்கணக்கில் செலவாகி உள்ளது. இதனால், கடுப்பான லைக்கா நிறுவனம் செலவை குறைத்துக் கொள்ளுமாறு கறாராக படக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

டென்ஷனான வடிவேலு
இந்த தகவலால் டென்ஷனான வடிவேலு, திரையில் நல்ல படம் வரவேண்டும் என்றால் செலவு கூடத்தான் செய்யும், இதுக்கெல்லாமா கணக்கு பார்ப்பதா? என தயாரிப்பு நிறுவனத்திடம் பொங்கி எழுந்துள்ளார் வடிவேலு. தயாரிப்பு நிறுவனத்தின் பஞ்சப்பாட்டால் இயக்குநர் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப்போய் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











