தர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்!

Recommended Video

Darbar Movie Review by Anandhan | Rajinikanth | Nayanthara | AR Murugadoss | Filmibeat Tamil

சென்னை: தர்பார் படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டியும் நடித்துள்ளனர். அவர்களை தவிர நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

வெற்றிநடை போடுகிறது

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

தர்பார் படம் உலகம் முழுவதும் 7000 தியோட்டர்களில் ரிலீஸானது. தமிழகத்தில் மட்டும் 4000 தியேட்டர்களில் ரிலீஸானது.

4 நாட்கள் வசூல்

4 நாட்கள் வசூல்

படம் ரிலீஸ் ஆகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று வரை படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரூ.150 கோடி வசூல்

ரூ.150 கோடி வசூல்

அதன்படி உலகம் முழுவதும் தர்பார் படம் 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X