INDIAN 2: இந்தியன் 2 ட்ரைலர் வெளியிடுவதில் பிரச்னை? காரணம் தெரிந்த ரசிகர்கள் அட்வைஸ் மேல் அட்வைஸ்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றாலே அது இயக்குநர் ஷங்கர்தான். இவரது படங்களில் கதைக்கேற்ற திரைக்கதையும் அந்த திரைக்கதைக்கேற்ற பிரம்மாண்டமும் இவரது பலமாக இன்று வரை இருந்து வருகிறது. இவரது இயக்கத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா புரெடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, கமல் ஹாசன் நடிப்பில் படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டு உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

Shankar INDIAN 2 Kamal Haasan

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த, பாடலாசிரியர் பா விஜய் எழுத்தில் உருவாகியிருந்த மாறா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Shankar INDIAN 2 Kamal Haasan

ட்ரைலர் ரிலீஸ்: படத்தில் இடம்பெற்றுள்ள தாத்தா வாராறே பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இந்தியன் படத்தின் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். ஏற்கனவே படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் வெளியாக இன்னும் ஏறக்குறைய 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழு தீவிரமான புரோமோஷனில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதி அதாவது நாளை படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது.

Shankar INDIAN 2 Kamal Haasan

புதிய அப்டேட்: இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தொடங்கி அதன் பின்னர் வெளியிடப்படக்கூடிய அனைத்து அப்டேட்டுகளும் Indian 2 என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தை தயாரித்த லைகா புரெடக்‌ஷன்ஸ் நிறுவனும் படத்தை இணைந்து தயாரித்துள்ள ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

Shankar INDIAN 2 Kamal Haasan

திரைத்துறையில் புது கலாச்சாரம்: சமீபகாலங்களாகவே, ஒரு படத்தின் அறிவிப்புகளை வெளியிட படக்குழு அந்த படத்தின் பெயரிலேயே சமூக வலைதளப்பக்கங்களைத் தொடங்கி அப்டேட்டுகளைக் கொடுப்பது திரைத்துறையில் ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக கல்கி 2898 ஏ.டி படம், புஷ்பா 2, சலார் ஆகிய படங்களுக்கு படங்களின் பெயரிலேயே சமூக வலைதளப்பக்கங்கள் தொடங்கப்பட்டு அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

Shankar INDIAN 2 Kamal Haasan

இதுதான் விஷயமா? இந்தியன் 2 படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து படத்தின் அப்டேட்டுகளை லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமும் கொடுத்து வந்தது. ஆனால் லைகா நிறுவனம்தான் அதிகமாக தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் அதிக அப்டேட்டுகளைக் கொடுத்து படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், லைகாவுக்கும் ரெட் ஜெயண்ட்ஸ்க்கும் படத்தின் அப்டேட்டுகளைக் கொடுப்பதில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அதனால்தான் படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் படத்தின் பெயரில் புதிய சமூகவலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரசிகர்கள் தரப்பில், படக்குழுவின் இந்த முடிவுக்கு, இதை நீங்கள் ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். இப்போதாவது செய்தீர்களே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read more about: shankar indian 2 kamal haasan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X