இந்தியன் 2 மேடையில் நாகினி சீரியல் நாயகி கவர்ச்சிக் குத்தாட்டம்; வீடியோவை வெளியிட்ட லைகா!

By mohanraj

சென்னை: தமிழ் திரை உலகில் அடுத்து வெளியாக உள்ள மிகப்பெரிய படங்கள் என்றால் அது அடுத்த வார இறுதியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா. கல்கி 2898 ஏ.டி திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியானாலும், தமிழில் இந்த படத்துக்கான புரோமஷன் வேலைகளை படக்குழு இன்னும் முழு மூச்சாக தொடங்கவில்லை. இந்த படத்தில் கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். அதன் பின்னர் அடுத்த மாதம் வெளியாக உள்ள தனுஷின் ஐம்பதாவது படமான ராயன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஆகியவை ஜூலை மாதத்தில் வெளியாகியுள்ள மிகப்பெரிய படங்களாக பார்க்கப்படுகிறது. இதில் ராயன் திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் இன்னும் தொடங்கப்படாததால் ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

Lyca Productions Indian 2 Audio Launch Indian 2 Kamal Haasan Director Shankar Anirudh

பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கடந்த கடந்த ஒன்றாம் தேதி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. குறிப்பாக கமலுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளை லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தினமும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறது.

Lyca Productions Indian 2 Audio Launch Indian 2 Kamal Haasan Director Shankar Anirudh

கவர்ச்சி நடனம் ஆடிய மௌனி ராய் நம்பியார்

அதன் அடிப்படையில் இன்று இசை வெளியீட்டு விழாவில் கவர்ச்சி நடனமாடிய மௌனி ராய் நம்பியாரின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் லைகா வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மௌனி ராய் நம்பியாரின் நடனம் குறித்த புகைப்படங்கள் வெளியிட்ட போதே ரசிகர்கள் லைக்குகளை தாராளமாக தட்டி விட்டிருந்தனர். இந்நிலையில் லைக்கா நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளதால் இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தங்க நிற உடையில் மின்னும் பெண்ணாக தனது அசாத்திய நடனத்தால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மௌனிராய் நம்பியார் ஒரு நிமிடம் கிறங்க வைத்தார் என்றே கூறலாம். குறிப்பாக கத்தி படத்தின் செல்பி புள்ள பாடலுக்கு அவர் ஆடிய நடனம் கொள்ளை அழகு.

யார் இந்த மௌனி ராய் நம்பியார்

மௌனி ராய் நம்பியார் வேற யாரும் இல்லை, சன் டிவியில் வெளியான தொலைக்காட்சி தொடரான நாகினி தொடரில் நாகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். இந்த தொடர் முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அங்கிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பப்பட்டிருந்தாலும் மௌனி ராய் நம்பியாருக்கு தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் பிறந்த மௌனராய் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சூரஜ் நம்பியார் என்ற தனது காதலரை கேரள மற்றும் மேற்குவங்க முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மௌனி ராய் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 32 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X