ரஜினிகாந்தின் கேரக்டரை இவ்ளோ சீக்கிரம் எப்படி சொல்றது.. காத்திருங்க.. லைகா வீடியோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசுக்கு மிகவும் சிறப்பாக தயாராகி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களையும் முடுக்கி விட்டுள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாடல்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.
குறிப்பாக ஃபர்ஸ்ட் சிங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கட்டி போட்டுள்ளது. இந்த பாடலில் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த இளம் இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றது. விருதுகளையும் இந்த படம் குவித்துவரும் நிலையில் சைமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஐந்து விருதுகளை தட்டி தூக்கியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த போதிலும் அவரது கேரக்டர் சிறப்பாக பார்க்கப்பட்டது.
வேட்டையன் படம்: இந்நிலையில் அடுத்ததாக ஜெய் பீம் புகழ் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அனிருத் இந்இசையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகி ஏராளமான வியூஸ்களை பெற்று வருகிறது.
வேட்டையன் இசை வெளியீடு: இதனிடையே, இன்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக தன்னுடைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் ரஜினியின் பேச்சு மிகச் சிறப்பாக பார்க்கப்படும். அந்த வகையில் இன்றைய தினம் அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்றும் குட்டிக்கதை சொல்வாரா என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். படத்தின் பாடல்கள், கேரக்டர் வீடியோக்கள் என லைகா நிறுவனமும் ஒருபுறம் மாஸ் காட்டி வருகிறது.
ரஜினி கேரக்டர் வீடியோ: கடந்த சில தினங்களாக படத்தின் நடிகர்கள் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களின் அடுத்தடுத்த கேரக்டர் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் இன்றைய தினம் ரஜினிகாந்தின் கேரக்டர் வீடியோவை வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், அவரது கேரக்டரை இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி சொல்வது என்று கேட்டு மாலை வரை காத்திருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் ரஜினியின் கேரக்டர் பெயர் குறித்து இந்த வீடியோவில் தெரியவரும் என்று நினைத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இருந்த போதிலும் இன்னும் சில மணி நேரங்களில் ரஜினியின் கேரக்டர் குறித்த விவரங்கள் இசை வெளியீட்டில் தெரியவரும் என்பதால் அவர்கள் இசை வெளியிட்டிற்காக உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











