யப்பா இது ஜெமினி கணேசன்ப்பா... ஏகே 62 அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள்... லைகா கொடுத்த ட்விஸ்ட்

சென்னை: திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான லைகா அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன், ரஜினியுடன் இரண்டு படங்களில் இணைந்துள்ள லைகா, அஜித்தின் ஏகே 62 படத்தையும் தயாரிக்க உள்ளது.

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தங்களது அடுத்த படம் குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், அது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

 ஏகே 62 அப்டேட்..?

ஏகே 62 அப்டேட்..?

அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் யாருமே எதிர்பாராதவிதமாக தாறுமாறான ஹிட் அடித்தது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் மாஸ் காட்டி வருகிறது. இதனால் அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள ஏகே 62 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநராக கமிட்டான விக்னேஷ் சிவன் விலகியதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விரைவில் ஏகே 62 அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

 லைகாவின் 24வது திரைப்படம்

லைகாவின் 24வது திரைப்படம்

இந்நிலையில், லைகா தயாரிக்கும் 24வது படத்தின் அபிசியல் அப்டேட் வெளியாகியுள்ளது. நேற்று மாலையே தங்கள் தயாரிப்பில் உருவாகும் 24வது படம் பற்றிய அப்டேட் நாளை வெளியாகும் என லைகா அறிவித்திருந்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 அப்டேட் தான் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது லைகா வெளியிட்ட அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் அமைந்துள்ளது. அருள் நிதி, பாரதி ராஜா இணைந்து நடிக்கும் திருவின் குரல் திரைப்படத்தின் அப்டேட் தான் தற்போது வெளியாகியுள்ளது.

 அருள்நிதி - பாரதிராஜா நடிப்பில்

அருள்நிதி - பாரதிராஜா நடிப்பில்

திருவின் குரல் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹரிஷ் பிரபு இயக்குகிறார், சாம் சிஎஸ் மியூசிக் கம்போஸ் செய்கிறார். அருள்நிதியும் பாரதிராஜாவும் லீடிங் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனையடுத்து திருவின் குரல் படத்தின் முதல் தோற்றத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள திருவின் குரல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 விரைவில் ரிலீஸ் அப்டேட்

விரைவில் ரிலீஸ் அப்டேட்

இந்நிலையில், திருவின் குரல் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைரி படம் மூலம் மீண்டும் லைம் லைட்டில் வந்துள்ள அருள்நிதிக்கு திருவின் குரல் இன்னொரு கம்பேக் படமாக அமையும் என சொல்லப்படுகிறது. முதன்முறையாக அருள்நிதியுடன் இயக்குநர் பாரதிராஜாவும் நடித்துள்ளது திருவின் குரல் படத்தின் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன், ரஜினி, அஜித் என பிரம்மாண்டமான படங்களை மட்டும் தயாரிக்காமல், திருவின் குரல் போன்ற சின்ன பட்ஜெட் படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X