நேதாஜி ஆளு.. தாத்தா வைப்.. வெளியானது இந்தியன் 2 கதறல் லிரிக் வீடியோ.. எப்படி இருக்கு தெரியுமா?

By MohanRaj

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூன்றாம் பாகம் இந்தாண்டு இறுதியிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகின்றது.

Lyca Productions Director Shankar Kamal Haasan Indian 2 Kadharalz Song Anirudh Music

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா

கடந்த ஒன்றாம் தேதி இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியான பாரா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. குறிப்பாக இந்தியன் படத்தில் இடம்பெற்றிருந்த கப்பலேறிப் போயாச்சு பாடலைப் போல இந்த பாடல் இருப்பதாக பலரும் பாராட்டி இருந்தனர். இதை அடுத்து இந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற பாடல் என்றால் அது "கதறல்" பாடல்தான். இந்த பாடல் தற்போது இணையத்தில் ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. அண்மையில் நடந்து முடிந்த 18 வது மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகளின் போது கூட இந்தப் பாடலை வைத்து இணையவாசிகள் பல வீடியோக்களை உருவாக்கி ட்ரெண்டாக்கி வந்தனர்.

Lyca Productions Director Shankar Kamal Haasan Indian 2 Kadharalz Song Anirudh Music

கதறல் பாடல் லிரிக் வீடியோ

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் கதறல் பாடலின் முழு லிரிக் வீடியோவை இன்று மாலை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. இந்த லிரிக் வீடியோ மொத்தம் 4.03 நிமிடங்கள் உள்ளது. சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடனமாடியுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தே இந்த பாடலை முழுவதுமாக பாடியுள்ளார். இந்த பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். கதறல் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியிருந்ததால் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்தியன் 2 படக்குழு

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், துப்பாக்கி படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து இந்த படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X