வேட்டையன் படத்தில் மிரட்டிய அமிதாப்பச்சன்.. எக்ஸ்க்ளூசிவ் வீடியோ வெளியிட்டு லைகா பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார் பாலிவுட் ஷாஹேன்ஷா என்று புகழப்படும் அமிதாப்பச்சன். இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அமிதாப்பச்சன் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும், திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 50 ஆண்டுகளை கடந்த அவரது சினிமா பயணம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வயதிலும் இவர் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

rajinikanth lyca productions amitabh bachchan

நடிகர் அமிதாப்பச்சன்: நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட்டின் ஷாஹேன்ஷா என்று புகழப்படுபவர். இவரது திரைப்பயணம் 50 ஆண்டுகளை கடந்து வெற்றிப்பயணமாக தொடாந்து வருகிறது. தற்போது 3600 கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரராக உள்ள நடிகர் அமிதாப்பச்சன் தற்போதும் ஒரு படத்திற்கு 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். அமிதாப்பச்சனிடம் 260 கோடி ரூபாய் மதிப்பிலான தனி விமானம் உள்ளது. மேலும் மும்பையில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான 2 மாடி பங்களா உள்ளிட்ட 4 ஆடம்பர வீடுகள் ஆகியவை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவருடைய முதல் சம்பளம் 400 ரூபாய் என்பது ஆச்சர்யத்தகவல்.

தளராத அமிதாப்பச்சன்: பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியான இவர் கொல்கத்தாவின் கப்பல் நிறுவனம் ஒன்றில் 400 ரூபாய் மாதச்சம்பளத்தில் பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் 8 பேருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். 1969ம் ஆண்டில் புவன் ஷோம் என்ற படத்தில் டப்பிங் ஆர்ட்டிற்காகவே தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கினார் அமிதாப் பச்சன். தொடர்ந்து அதே ஆண்டில் சாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதுமுதல் 1973ம் ஆண்டுவரை அமிதாப்பிற்கு சிறப்பாக அமையவில்லை. 12 படங்கள் சொதப்பிய நிலையில், மனம் தளராக அமிதாப்பிற்கு Zanjeer படம் சிறப்பாக கைக்கொடுத்தது.

வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன்: தற்போது அமிதாப்பச்சன் தமிழில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த வயதில்தான் அவருக்கு தமிழில் என்ட்ரியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக ரஜினிகாந்துடன் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன் தற்போது 30 ஆண்டுகளை கடந்து மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சத்யதேவ் என்ற அவரது கேரக்டர் படத்தின் முக்கியமான மற்றும் அழுத்தமான கேரக்டராக அமைந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 82வது பிறந்தநாளை அமிதாப்பச்சன் கொண்டாடி வருகிறார்.

அமிதாப்பிற்கு லைகா பிறந்தநாள் வாழ்த்து: இதையொட்டி அவருக்கு திரைத்துறையினரும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வேட்டையன் படத்தின் தயாரிப்புதரப்பான லைகா நிறுவனமும் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதையொட்டி நடிகர் அமிதாப்பச்சனின் வேட்டையன் பட காட்சிகளுக்கான வீடியோவையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளது. மேலும் இந்திய சினிமாவின் ஷாஹேன்ஷா என்றும் பாராட்டியுள்ளது. வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சனின் கேரக்டர் குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X