அனிருத்தை கழட்டிவிட்டுட்டு லைகா செய்த சம்பவம்! ஜெயிலருக்கு ஹுக்கும் மாதிரி.. விடாமுயற்சிக்கு AK பாடல்

சென்னை: அஜித் குமார் நடிப்பில் நாளை அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் விடாமுயற்சி (Vidamuyarchi FDFS) . இந்தப் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு, நாளை ரிலீஸ் ஆகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல காட்சிகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இப்படியான நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, அனிருத்தை கழட்டி விட்டுவிட்டு, விடாமுயற்சி படத்திற்காக ரசிகர்களை கவரும் வகையில் ஒரு பாடலை உருவாக்கி ரிலீஸ் செய்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி (Vidaamuyarchi FDFS) படத்தில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து இன்னும் படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதே நேரத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தின் கதையை தனது கதை இல்லை எனக் கூறியுள்ளார்.

vidaamuyarchi ajithkumar

படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என இதுவரை படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்திற்குமே பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தை அஜர்பைஜானில் படமெடுத்தனர். நாளை படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இதுவரை காலை 9 மணி காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. காரணம், இது தொடர்பாக அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்னர் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

vidaamuyarchi ajithkumar

விடாமுயற்சி: இப்படியான நிலையில்தான் இன்று அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி, படத்திற்காக சிறப்பு பாடல் ஒன்றை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளது லைகா நிறுவனம். இந்தப் பாடல் அனிருத் இசை அமைக்கவில்லை. மேலும் அனிருத் பாடவும் இல்லை. மேலும், இந்தப் பாடல், படத்தில் இடம் பெறப் போவதில்லை என கூறப்படுகிறது.

vidaamuyarchi ajithkumar

ஏ.கே. பாடல்: இசை அமைப்பாளர் மோனிஷ். எஸ் என்பவர் இசையமைத்து அவரும் ஹைடி கார்டியும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். விடாமுயற்சி என்ற சொல்லையும் ஏ.கே அதாவது அஜித் குமார் என்ற சொல்லையும் மையமாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலை அஜய் ஸ்ரீராம் என்பவர் எழுதியுள்ளார். பாடலின் வரிகள் அனைத்தும் அஜித் ரசிகர்கள் அஜித்தை என்னவாக நினைத்து கொண்டாடி வருகிறார்களோ, அதை அப்படியே மாஸான வரிகளை மாற்றி, பாடலை உருவாக்கியுள்ளனர்.

vidaamuyarchi ajithkumar

மரண மாஸ்: பாடலைக் கேட்டு பலரும் பாடல் வேற லெவலில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். பாடலுக்கு மோஷன் பிக்சர்களாக டிரைலரில் இடம் பெற்ற காட்சிகளை இணைத்துள்ளனர். பாடலின் மாஸான இசை, மிகவும் ஷார்ப்பான பாடல் வரிகள், கர்ஜிக்கும் குரல் என கேட்பதற்கே வேற லெவலில் உள்ளது. சீக்கிரமே அஜித் ரசிகர்களின் ரிங் டோனாக இது மாறிவிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு எப்படி ஹுக்கும் பாடல் வேற லெவலில் ஹிட் அடித்ததோ, அதேபோல் விடாமுயற்சி ஏ.கே. பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகின்றது. இந்தப் பாடலும், ப்ரோமோசனின் ஒரு அங்கம் என கூறப்படுகிறது. அனிருத்தை ஏன் கழட்டி விட்டார்கள் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

vidaamuyarchi ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X