இந்தியன் தாத்தாவின் கதறவிடும் அறிமுகம்.. லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ.. டிக்கெட் புக்கிங் செம!
சென்னை: 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி, நெடுமுடி வேணு, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தேசிய விருதுகளை அள்ளிய அந்த படத்தின் அடுத்த பாகம் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2வாக நாளை வெளியாகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் வழக்கம்போல சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 திரைப்படம் காலை 9:00 மணிக்கு வெளியாகிறது. ஆனால், பெங்களூர், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என மற்ற பகுதிகளில் அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியாகின்றன.
இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்காக அந்த காலத்திலேயே கமல்ஹாசன் இளம் வயதிலேயே தாத்தா கெட்டப்பில் மெனக்கெட்டு போட்ட பிராஸ்தெடிக் மேக்கப் உள்பட படத்தின் பீரியட் போர்ஷன், ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் என அனைத்துமே காலத்தால் அழியாத ஒன்று. அதன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது.

தாத்தா வராரு: அனிருத் இசையில் வெளியான "தாத்தா வராரு கதற விட போறாரு" பாடல் ஏற்கனவே பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டரில் மீண்டும் இந்தியன் தாத்தாவை ரசிகர்கள் பார்க்கப்போகும் அனுபவம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் புக்காகி வருகிறது. இந்தியன் 2 படத்துக்கு எதிராக சோசியல் மீடியாவில் நெகட்டிவிட்டி இருந்தாலும், பொதுமக்கள் கமல்ஹாசனை சேனாபதி இந்தியன் தாத்தாவாக பார்க்க பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் தெரிகிறது.
சேனாபதியின் ஜர்னி: இந்தியன் தாத்தாவான சேனாபதியின் ஜர்னி வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு கடைசி நேர புரமோஷனை அதிகரித்துள்ளது. மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த சைனீஸ் மாஸ்டர் 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுகிறார் என்பதை படத்திலேயே ஷங்கர் வைத்திருக்கும் காட்சிகள் நேற்று வெளியான நிலையில், அடுத்ததாக முதல் பாகத்தில் சேனாபதியின் பயணம், நேதாஜி அணியில் செயலாற்றியது உள்ளிட்ட காட்சிகளை காட்டி கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளனர்.

ஷங்கர் படம்: இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள நிலையில், படத்தில் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது என்பதால், கல்கி படத்தை அதன் மேக்கிங்கிற்காகவே நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரசிகர்கள் பார்த்து 1000 கோடி வசூலை பெற வைத்தது போல இந்தியன் 2 படத்தையும் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடுவார்கள் என தெரிகிறது. கண்டிப்பாக இது ஓடிடிக்கான படம் இல்லை என்பதை அனைத்து ரசிகர்களும் அறிந்த நிலையில், தியேட்டரில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் பூர்த்தி செய்தார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











