Lyca productions: அமோக வரவேற்பு.. லால் சலாம் குறித்து அடுத்தடுத்து பதிவிடும் லைகா நிறுவனம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 9ம் தேதி லால் சலாம் படம் வெளியானது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, தங்கதுரை உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை படக் குழுவினருக்கு பெற்று தந்துள்ளது. வசூலிலும் சாதனை செய்து வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை ரஜினிக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லால் சலாம் படம் வெளியாகியுள்ளது. படத்தில் கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்துள்ள போதிலும், படத்தை தூக்கி நிறுத்தும்வகையில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் அவரது கேரக்டர் இந்தப் படத்தில் வருகிறது. அதனால் படத்தில் அவரது கேரக்டர் கேமியோ என்பதை மறந்து ரசிகர்கள் படத்தை என்ஜாய் செய்து வருகின்றனர். இந்தப் படத்தையடுத்து ஐஸ்வர்யா ரஜினிக்கு மிகச்சிறப்பான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகி கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது லால் சலாம் படம். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
லால் சலாம் படம்: மேலும் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தங்கதுரை, தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களின் நடித்துள்ளனர். தேர்த்திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. லால் சலாம் படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அந்த அளவில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் முன்பகுதியில் சில நிமிடங்களே நடித்துள்ள ரஜினிகாந்த் பின் பகுதியில் தன்னுடைய ஆளுமையால் படத்தின் கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார் .

லைகா மகிழ்ச்சிப்பதிவு: லால் சலாம் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து அரங்கு கொள்ளா காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்சும் தன்னுடைய மகிழ்ச்சியை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகிறது. படத்தில் ரஜினியின் நடிப்பை பாராட்டி தன்னுடைய twitter பக்கத்தில் பேசியுள்ள லைகா ப்ரொடக்ஷன்ஸ் அவரது அதிரடியான மற்றும் அழுத்தமான கேரக்டரையும் பாராட்டி பதிவிட்டுள்ளது. ரஜினியின் அடுத்தப்படமான வேட்டையன் படத்தையும் லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆரவாரம்: இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ரசிகர்கள் சிறப்பான கமெண்ட் செய்துள்ள வீடியோவையும் இரு தினங்களுக்கு முன்பு லைகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்ததாகவும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்திருந்தனர்


Click it and Unblock the Notifications











