Vidamuyarchi: த்ரிஷாவுக்கு இன்னும் அட்வான்ஸே கொடுக்கலையா.. அப்போ விடாமுயற்சி ஷூட்டிங் எப்போ?
சென்னை: சமீபத்தில் லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் பெரிய படங்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அது மேலும், தள்ளிப் போகும் என்கின்றனர்.
காரணம் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ள நடிகை த்ரிஷாவுக்கான அட்வான்ஸையே இன்னமும் லைகா தரப்பில் இருந்து கொடுத்து அக்ரீமென்ட் போடவில்லை என்கின்றனர்.

குந்தவைக்கு வெயிட்டான சம்பளம்:
லைகா தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் குந்தவையாக நடித்த நடிகை த்ரிஷாவுக்கு வெயிட்டான சம்பளத்தை லைகா நிறுவனம் வழங்கியதாக கூறுகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு கடைசி வரை பாலிவுட் ஹீரோயின்கள் யாரும் கிடைக்காத நிலையில், த்ரிஷாவையே அந்த படத்துக்கும் ஜோடியாக்க முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர்.
விடாமுயற்சியில் த்ரிஷா தான் ஹீரோயின்:
மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக எந்தவொரு ஏற்பாடுகளும் நடைபெறாத நிலையில், விடாமுயற்சி டைட்டில் அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

மே மாதமே முடியப்போகும் நிலையிலும் நடிகர் அஜித் இன்னமும் சென்னைக்கு திரும்பவில்லை என்றும் லைகா நிறுவனம் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் இன்னும் சில பாலிவுட் நடிகைகள் பெயர்கள் எல்லாம் அடிபட்டு வந்த நிலையில், கடைசியில் விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் த்ரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பதை உறுதி செய்து விட்டதாக கூறுகின்றனர்.
சம்பளத்தை ஏற்றிய த்ரிஷா:
நயன்தாரா 10 கோடி ரூபாயும், சமந்தா 8 கோடி ரூபாயும் வாங்கி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு வெறும் 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த த்ரிஷா லியோ படத்துக்கு பிறகு தனது மார்க்கெட் கிடுகிடுவென வளர்வதை பார்த்து தனது சம்பளத்தையும் அதிகரித்து விட்டதாக கூறுகின்ற்னார்.
விடாமுயற்சி படத்தில் நடிக்க 6 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் கேட்டு வருகிறார் த்ரிஷா என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

அட்வான்ஸ் கொடுக்கவே காசு இல்லை:
த்ரிஷா ஒரு பக்கம் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை மற்ற நடிகைகளுக்கு இணையாக ஏற்றி விட வேண்டும் என ஏற்றி விட்டதாக கூறப்படும் நிலையில், விடாமுயற்சிக்கு த்ரிஷாவை புக் செய்ய இன்னமும் லைகா தரப்பு அட்வான்ஸ் கூட அவருக்கு வழங்க முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறது என்கின்றனர்.
பொன்னியின் செல்வன் 2வுக்கு அவ்வளவு ப்ரமோஷன் செய்தும் முதல் பாகத்தின் வசூலை நெருங்கக் கூட முடியாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டும் லைகாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். குந்தவைக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த நிலையில், கூடிய சீக்கிரமே பணத்தை கொடுத்து விடுகிறோம் இந்த படத்தில் நடிங்க என லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதாகவும் கூறுகின்றனர்.
த்ரிஷா லைகாவின் நிலைமையை புரிந்துக் கொண்டு அஜித் படத்தில் நடிக்க சம்மதித்தால் திட்டமிட்டப்படி ஜூன் முதல் வாரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம் ஆகி விடும் என்றும் இல்லையென்றால் தாமதமாகும் என்றும் ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











