தம்பி உனக்கு அந்த பிசினஸ் எல்லாம் தெரியாது.. ஆரம்பத்திலேயே விஜய் மகன் கனவுக்கு வேட்டு வைத்த லைகா?
சென்னை: லைகா நிறுவனத்தில் நடிகர் விஜய்யின் மகன் படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் சினிமா வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் நெப்போடிசம் சர்ச்சையும் மறுபக்கம் அப்பா விஜய்க்கு எதிராகவே அம்மா மற்றும் தாத்தாவின் தூண்டுதல் பேரில் ஜேசன் சஞ்சய் தனியாக களமிறங்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தற்போது புதிய தலைவலியாக ஜேசன் சஞ்சயின் ஆசைக்கு ஆரம்பத்திலேயே லைகா நிறுவனம் ஆப்பு அடித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் கோடம்பாக்கத்தில் பற்றி எரிகின்றன.
ஏ.ஆர். அமீனை கொண்டு வர ஆசை: தளபதியின் வாரிசான ஜேசன் சஞ்சய் இசைப்புயலில் வாரிசான ஏ.ஆர். அமீனை தனது படத்திற்கு இசையமைக்க வைக்க ஆசைப்பட்டு அதை லைகா நிறுவனத்திடம் சமீபத்தில் தெரிவித்ததாகவும் ஆனால், அவரது ஆசைக்கு லைகா தரப்பு முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை பயன்படுத்திய லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்துக்கு மரகதமணியையும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆனால், அவரது மகனை இசையமைப்பாளராக கொண்டு வரும் எண்ணம் லைகாவுக்கு பெரிதாக இல்லை என்கின்றனர்.
அனிருத் பண்ணட்டும்: அப்பா விஜய்க்கு தொடர்ந்து ஹிட் பாடல்களையும் மாஸ் பிஜிஎம்மையும் போட்டு ஹிட் கொடுத்து வரும் அனிருத்தை உங்க படத்துக்கு மியூசிக் பண்ண கேட்கலாம் என்றும் அமீன் இன்னும் வளர்ந்த வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு ரிஸ்க்கை எடுக்க சொல்லாதீங்க இது பிசினஸ் என கறாராக லைகா தரப்பு சொல்லியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இதனால் தனது நண்பனை தன்னுடனே சினிமாவில் அறிமுகப்படுத்த முடியவில்லையே என்கிற வருத்தம் லேசாக ஜேசன் சஞ்சய்க்கு இருந்தாலும் காசு போடும் தயாரிப்பாளர்களின் கட்டளைக்கு கீழ் பணிந்து ஓகே சொல்லி விட்டார் என்கின்றனர். கூடிய விரைவிலேயே சஞ்சய் தத் ஸ்க்ரிப்ட் வொர்க் மற்றும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை செய்து விட்டால் படத்தின் பூஜையை போட்டு விட லைகா ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











