இந்தியன் 2 விபத்தில் 3 பேர் பலியான சம்பவம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த லைகா சுபாஷ்கரன்!

By

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து, தனது பிறந்த நாளை, லைகா சுபாஷ்கரன் ரத்து செய்தார்.

Recommended Video

Indian 2 Shooting Spot | Crane Crash | Sankar Compensation

இயக்குனர் ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர், உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வந்தது.

கிரேன் விழுந்தது

கிரேன் விழுந்தது

கடந்த 19 ஆம் தேதி இரவு நடந்த படப்பிடிப்பின் போது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தும் உயிரிழப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொடூரமான விபத்து

கொடூரமான விபத்து

இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி நடிகர் கமல்ஹாசன் , இது கொடூரமான விபத்து என்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் கமல், காஜல், ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இன்னும் மீளவில்லை

இன்னும் மீளவில்லை

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்தார். இதுபற்றி அவர், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

கொண்டாட்டம் வேண்டாம்

கொண்டாட்டம் வேண்டாம்

இந்நிலையில், லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரனுக்கு நேற்று பிறந்த நாள். வழக்கமாக, தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் அவர், இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக, எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று தெரிவித்து விட்டார். அவரது ஊழியர்களையும் கொண்டாட வேண்டாம் என்று கூறிவிட்டார். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவர், நலத்திட்ட உதவிகளை வழங்குவது வழக்கம்.

மவுன அஞ்சலி

மவுன அஞ்சலி

நேற்று, எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது இறந்தவர்களுக்காக, மிகவும் வருந்துவதாக சுபாஷ்கரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லண்டனில் உள்ள லைக்காவின் தலைமை அலுவலகத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X