Vidamuyarchi: கைவிட வாய்ப்பில்லை.. விரைவில் விடாமுயற்சி சூட்டிங்.. லைகா திட்டவட்டம்!

சென்னை: நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியானது.

இதையடுத்து மார்ச் மாதத்திலேயே அஜித்தின் ஏகே62 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் படம் அறிவிக்கப்பட்டு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது. அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வெளியானது.

Lyca Subaskaran confirms that Ajiths Vidamuyarchi shooting will start soon

அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக லைகா அறிவிப்பு: நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது துணிவு. அஜித் -ஹெச் வினோத் கூட்டணியில் 3வதாக வெளியான துணிவு படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் சிறப்பான வசூலை பெற்றது. விமர்சனரீதியாகவும் இந்தப் படம் அஜித்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

முன்னதாக துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தை இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், நயன்தாரா அஜித்தின் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் சந்தானம் லீட் கேரக்டரில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மார்ச் மாதத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் உடன்பாடு இல்லாததால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் கமிட்டானார் அஜித்.

அஜித் -மகிழ்திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி. தொடர்ந்து சூட்டிங் குறித்த எந்த அறிவிப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தில் உள்ளனர். ஏகே62 படம் சரியான நேரத்தில் சூட்டிங் துவங்கப்பட்டிருந்தால் தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் இன்னும் படத்தின் சூட்டிங்கே துவங்கப்படவில்லை. குறைந்தபட்சம் அறிவிப்புகூட வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் அதுகுறித்த எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், வெளிநாடுகளில் தன்னுடைய பைக் பயணத்தை மேற்கொண்டு வந்தார் அஜித். ஏகே62 படத்திற்கான ஸ்கிரிப்டுடன் மகிழ் திருமேனி மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், ஸ்கிரிப்ட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படம் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

இதை உண்மையாக்கும் வகையில், வெளிநாட்டில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போது அஜித் ஸ்மார்ட்டாகியுள்ளதும் அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி புரொஜெக்ட் கைவிடப்படுவதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் தீயாக பரவியது. இந்த தகவல் ரசிகர்களை அதிகமான குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

விடாமுயற்சி படத்தை கைவிடுவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் லைகாவின் பெருமைமிகு தயாரிப்பு என்றும் விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏகே62 படத்தில் த்ரிஷா, தமன்னா, அர்ஜூன், அர்ஜூன் தாஸ் என நடிகர்கள் பட்டாளமே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படம் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X