லைகா கொடுத்த ட்விஸ்ட்... லால் சலாம், தலைவர் 171, ஏகே 62, PS 2... வரிசை கட்டி நிற்கும் அப்டேட்ஸ்

சென்னை: லைகா நிறுவனம் நாளை (வியாழன்) காலை 10.30 மணிக்கு மிகப் பெரிய அப்டேட் வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்துள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களை லைகா தயாரிக்கவுள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ரஜினியின் லால் சலாம், தலைவர் 171, கமலின் இந்தியன் 2, அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 லைகாவின் மிகப் பெரிய அப்டேட்

லைகாவின் மிகப் பெரிய அப்டேட்

மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா, நாளை ( மார்ச் 2) காலை 10.30 மணிக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகும் என ட்வீட் செய்துள்ளது. லைகாவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. அதனால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அல்லது ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ரஜினி கேமியோ ரோலில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதனையடுத்து ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

 இந்தியன் 2 ரிலீஸ் தேதி

இந்தியன் 2 ரிலீஸ் தேதி

அதேபோல், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து ரெட் ஜெயன்ட்ஸும் தயாரித்து வருகிறது. வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் நாளை வெளியாகலாம் என கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 அஜித்தின் ஏகே 62 அப்டேட்

அஜித்தின் ஏகே 62 அப்டேட்

முக்கியமாக அஜித்தின் ஏகே 62 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ஏகே 62 அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி தற்போது ஏகே 62 அப்டேட் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் ஏகே 62 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X