twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரிட்டிஷ் மக்களுக்காக அதி நவீன மருத்துவமனைகளைத் திறந்த லைக்கா நிறுவனம்!

    By Shankar
    |

    லண்டன்: பிரிட்டனில் வாழும் மக்களுக்காக அதி நவீன மருத்துமனைகளைத் திறந்துள்ளது ஈழத் தமிழர் சுபாஷ்கரன் நடத்தி வரும் லைக்கா நிறுவனம்.

    தொழிலதிபரும், கத்தி படத் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லி ராஜா நடத்தி வரும் லைக்கா நிறுவனம் ஆரம்பத்தில் மொபைல் சேவையை மட்டுமே செய்து வந்தது. நாளடைவில் வயர்லெஸ் சேவை, விமான சேவை என பல துறைகளிலும் கால்பதித்தது.

    இப்போது மருத்துவத் துறையில் இறங்கியுள்ளது.

    லண்டனில் புதிதாக பல நோய்களை துல்லியமாக கண்டறியும் மருத்துவமனைகளை இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இவற்றில் அதி நவீன ஸ்கேனிங் வசதிகள், பல அதி நவீன தொழில் நுட்பம் மிக்க நோயைக் கண்டறியும் பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றை இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளனர்.

    தரமான நோய் கண்டறியும் அதி நவீன வசதிகளைக் கொண்ட நிலையம் ஒன்று இன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மேயர் பாரிஸ் ஜான்ஸன், லைக்கா குழுமத்தின் சிஇஓ சுபாஷ்கரன் அல்லிராஜா, பிரேம் சிவசாமி, அதி நவீன முறையில் நோய்களை கண்டறியும் நிலையங்களை ஏற்கனவே நடத்தி வரும் ஈழத் தமிழரான சென் கந்தையா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்கள்.

    "பிரிட்டனில் உள்ள அனைத்து மக்களுக்கும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். எனவே நோய்களை நாம் முதலில் துல்லியமாகக் கண்டறியவேண்டும். அதற்காகவே இதுபோன்ற நிலையங்களை நாம் ஆரம்பித்து உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார் சுபாஷ்கரன் அல்லிராஜா.

    Read more about: lycca london லண்டன்
    English summary
    Fast Growing MNC Lycca is entering in to health sector with huge plans. Initially the company has launched its first diagnosing center with modern amenities in London.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X