இளையராஜா சொன்னது தான் உண்மை.. லிடியன் நாதஸ்வரம் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: கடந்த ஒரு வாரமாக சிம்பொனி என்ற வார்த்தையை தமிழக மக்கள் மூச்சுக்காற்று போல் பேசி வருகின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும் இசைஞானி இளையராஜா செய்த சாதனைகள் குறித்தும் பேசி வருகின்றனர். இதனிடையே, இசைஞானி இளையராஜா சிம்பொனி இசையை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இசையமைத்து வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இளையராஜாவின் மாணவராக இருக்கும் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசைக்கு உதவி செய்ததாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிப்பது போல் இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து லிடியன் நாதஸ்வரம் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பொனி இசை அரங்கேற்றம்: இசைஞானி இளையராஜா லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அப்போது அவருக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். திரை பிரபலங்களான ரஜினி, மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி வெளியிட இளையராஜா தன்னை ஊக்குவித்ததாகவும், அவரது ஆசியுடன் நானும் சிமபொனி வெளியிட இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் தெரிவித்தார்.

lydian nadhaswaram lydian nadhaswaram symphony Maestro ilayaraja

இளையராஜா வீடியோ: லிடியன் நாதஸ்வரம் இளையராஜாவிற்கு சிம்பொனி இசைக்கு உதவியதாகவும் செய்திகளும் வெளியானது. அதற்கு விளக்கம் அளித்து இளையராஜா வெளியிட்ட வீடியோவில், "லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே, இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள் அதன் பிறகு கம்போஸ் பண்ணு என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்திற்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக் கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்" என்று கூறியுள்ளார்.

லிடியன் நாதஸ்வரம் விளக்கம்: சர்ச்சைகளை தாண்டி இளையராஜாவை திட்ட வாய்ப்பு கிடைத்தது தற்பெருமை பிடித்தவர் என்றும், பொறாமை குணம் கொண்டவர் என பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், லிடியன் நாதஸ்வரம் அளித்த பேட்டியில், "இளையராஜா அங்கிள் எனக்கு குரு. அவர் சொன்னது தான் உண்மை. சிம்பொனி பற்றி பேசும்போது, நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையமைத்து நிறைய விருதுகளை வாங்கு, பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துவிடு என என்னிடம் கூறினார். இளையராஜா ரொம்ப ரொம்ப ஹானஸ்ட், அவர் எப்போதும் மனதில் ஒன்று வைத்து பேசமாட்டார். வெளியில் பார்ப்பவர்களுக்கு கோபமாய் பேசுவது போன்று தான் தெரியும். ஆனால், அவர் உண்மையில் அப்படி இல்லை என லிடியன் நாதஸ்வரம் தெரிவித்துள்ளார்.

திருக்குறள்: லண்டனுக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த லிடியன், நான் இப்போது திருக்குறளுக்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறேன். அதனால் தான் செல்லவில்லை, இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்றது போன்று திருவாசகமும் தயாராகி வருகிறது என லிடியன் நாதஸ்வரம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X