ஏ.ஆர். ரஹ்மான் மெச்சும் லிடியனின் கனவு என்ன தெரியுமா?

By Siva

Recommended Video

Lydian Nadhaswaram: இந்த குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்-வீடியோ

சென்னை: 2 கைகளால் 2 பியானோக்களை வாசித்து அசத்திய லிடியனின் ஆசை, கனவு என்னவென்று தெரிய வந்துள்ளது.

சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ஸ்ட் பெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கே. எம். இசைப் பள்ளி மாணவனான அவர் தனது கனவு குறித்து தெரிவித்துள்ளார்.

பியானோ

பியானோ

லிடியனுக்கு இசை ஆல்பங்கள் வெளியிடும் ஆசை உள்ளது. மேலும் இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். முக்கியமாக நிலவுக்கு சென்று அங்கு பியானோ வாசிக்க வேண்டும் என்பதே லிடியனின் கனவு. நிலவில் என்ன வாசிக்க வேண்டும் என்பதை கூட லிடியன் முடிவு செய்துவிட்டார்.

லிடியன்

லிடியன்

18 மாத குழந்தையாக இருந்தபோது தான் லிடியன் முதன்முதலாக பியானோ வாசித்துள்ளார். தந்தை எது சொல்லிக் கொடுத்தாலும் நினைவில் வைத்து வாசித்துள்ளார். 4 மாத குழந்தையாக இருந்தபோது லிடியன் தனது விரல்களை தட்டித் தட்டி இசையமைப்பதை பார்த்ததாக அவரின் தந்தை சதீஷ் தெரிவித்துள்ளார். லிடியனின் திறமையை பார்த்து வியந்தபோதிலும் அது குறித்து யாரிடமும் கூறவில்லை என்கிறார் அவர்.

திறமை

திறமை

4 மாத குழந்தை விரல்களை தட்டி இசையமைக்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் யாரிடமும் கூறவில்லை. தற்போது மக்களுக்கு அவரின் திறமை பற்றி புரிந்துவிட்டது என்று கூறி பெருமைப்படுகிறார் சதீஷ்.

வீடியோ கேம்ஸ்

வீடியோ கேம்ஸ்

லிடியன் டிவி பார்க்க மாட்டார், வீடியோ கேம்ஸ் விளையாட மாட்டார். அவருக்கு எப்பொழுதும் இசை பற்றிய சிந்தனையே. லிடியனுக்கு நண்பர்களும் அவ்வளவாக இல்லை. லிடியனும் சரி, அவரின் அக்காவும் சரி என் இசைப் பணியில் உதவியாக உள்ளனர் என்கிறார் சதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X