வெயிட் பண்ணுங்க, வேற லெவல் பாட்டு... பாடலாசிரியர் விவேகா ஜில்
சென்னை: ரஜினியின் அடுத்தப் படத்தில், பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்று பாடலாசிரியர் விவேகா சொன்னார்.
தர்பார் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேகா பாடல் எழுதுகிறார். இவர் ஏற்கனவே, பல ஹிட் பாடல்களை எழுதியவர்.
அவரிம் கேட்டபோது, ரஜினியின் அடுத்த படத்துக்குப் பாடல் எழுதி வருகிறேன். கண்டிப்பாக இந்த பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன். இப்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வெளிவர இருக்கும், தபாங் 3 படத்துக்கு முழுப் பாடல்களையும் எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.
கார்த்தி நடிக்கும் சுல்தான், ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு உட்பட பல படங்களுக்கு முழுப் பாடல்களையும் எழுதி வருகிறேன்.
பாடல் என்பது வார்த்தை விளையாட்டு. இந்த சாகச விளையாட்டை விளையாடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து சிறந்த பாடல்களை எழுத வேண்டும் என்பது என் ஆசை என்றார் விவேகா.


Click it and Unblock the Notifications











