நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை.. இளையராஜா குறித்த கேள்வி.. கோபமடைந்த வைரமுத்து!

சென்னை: இளையராஜா குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் கோபமடைந்த வைரமுத்து, நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆனால், காலம், சர்ச்சைகளை முடிக்க விரும்பவில்லை என்று கோபமாக பேசினார்.

திரைப்படப் பாடலுக்கு இசை மட்டுமல்ல, பாடல் வரியும் முக்கியம் என கவிஞர் வைரமுத்து பேசிய நிலையில், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகர் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்

lyricist and poet Vairamuthu Angry Reply to Ilayaraja Issue

சென்னையில் கடந்த மாதம் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து அந்த விழாவில் பேசி இருந்தார்

கங்கை அமரன் சர்ச்சை பேச்சு: இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கங்கை அமரன். அதில், உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். இதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும், இதற்கு மேலும் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அவர் பேச மாட்டார் அவருடைய தம்பியாகிய நான் பேசுவேன் என்றும் அந்த வீடியோவில் வைரமுத்துவை மிரட்டும் வகையில் பேசி இருந்தார். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. பலரும் இளையராஜா குறித்து பல கருத்துக்களை முன்வைத்தனர்.

என் வேலையில்லை: இந்த விவகாரம் குறித்து வீடியோவில் பேசிய இளையராஜா, என்னைப் பற்றி நிறைய வீடியோக்கள் வந்து கொண்டு இருப்பதாக வேண்டியவர்கள் சொன்னார்கள். நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால், மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலையல்ல. என்னுடைய வேலையைக் கவனிப்பது என்னுடைய வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருக்கிற நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

பண்பாடு இல்லை: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவந்த வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் செய்தியாளர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பே, முடிந்த கதை தொடங்க வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள் என்று ஆரம்பத்திலேயே இளையராஜா குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போதும் செய்தியாளர்கள் ஒருவர், இந்த விவகாரத்தில் அழுத்தம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து,இதுகுறித்து பேசுவது பண்பாட்டு ரீதியாக உகந்தது இல்லை என்பது என் கருத்து என்றார்.

நான் சர்ச்சையை விரும்பவில்லை: இதையடுத்து மற்றொரு செய்தியாளர் அவர் சிம்பொனி முடித்துவிட்டு வந்து இருக்கிறாரா, இளையராஜா என்று கேட்டார். இந்த கேள்வியால் சற்று கோபமடைந்த வைரமுத்து, இந்த செய்திகளை நீங்க தவிர்க்க விரும்ப மாட்டேன் என்கிறீர்கள். நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. உண்டாக்கப்படுகிற சர்ச்சையில் இருந்து நான் வெளியேய விரும்புகிறேன்.

ஆனால், காலம், சர்ச்சைகளை முடிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த சமூகம் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு, அதில் குளிர் காய நினைக்கிறது. ஆனால், தனி மனிதர்கள் சர்ச்சைகளைவிட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X