twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “என் ஆதங்கம் இதுதான்“ தற்கொலை செய்து கொண்ட தூரிகையின் த்ரோபேக் பேட்டி!

    |

    சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பெண்ணியம் பேசும் சிந்தனையாளரான தூரிகையின் இந்த முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இவர் "பீயிங் வுமன்" (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்துள்ளார்.

    தூரிகை பீயிங் வுமன் தொடங்கிய போது ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த த்ரோ பேக் பேட்டியை இப்போது பார்க்கலாம்.

    ’விக்ரம் ஏஜெண்ட் டீனா’ வசந்தியின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தற்கொலை முடிவை நாடியது ஏன்?’விக்ரம் ஏஜெண்ட் டீனா’ வசந்தியின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தற்கொலை முடிவை நாடியது ஏன்?

    தூரிகை கபிலன்

    தூரிகை கபிலன்

    பீயிங் வுமன் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் இந்த பத்திரிக்கையில் இந்த பத்திரிக்கையில் சாதனைபடைத்த பெண்களை கொண்டாடும் பத்திரிக்கையாகும். ஏன் என்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் என்றவுடன் அனிதா,ஹசினி என பல பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், சாதனை செய்த பெண்கள் என்றால் மதர் தெரேசா,கல்பனா சாவ்லான பெயர் மட்டும்தான் நினைவுக்கு வருகிறது இதுதான் என் ஆதங்கம்.

    என் ஆசை

    என் ஆசை

    பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயங்களை பற்றி பேச நிறைய பேர் இருக்காங்க. ஆனால் சாதனையாளர்களை பற்றி பெரிதாக யாரும் பேசுவது இல்லை அதைபற்றி பேசவேண்டும் என்பதற்காக இந்தபத்திரிக்கையை தொடங்கினேன். இதில், பெண்களின் சாதனை, அழகை கொண்டாடப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.போதுவா ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தும் போது அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்வார்கள். ஒரு பெண்ணாக இருந்து மற்றொரு பெண்ணுக்கு அந்த உற்சாகத்தை நான் கொடுக்க நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் தூரிகை பேசிஉள்ளார்.

    தூக்கிட்டு தற்கொலை

    பெண்களுக்காக ,பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை கொண்ட கவிஞர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சற்று முன் தூக்கிட்டு தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை., தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். நாளை காலை 9.30 மணி அளவில் கபிலனின் வீட்டிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    English summary
    lyricist kabilan daughter thoorigai kabilan throw bank interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X