சேராமல் போன சிம்பு -ஐஸ்வர்யா ராய் ஜோடி.. கேவி ஆனந்த் இயக்கவிருந்த படம்.. சொன்னது யாருன்னு பாருங்க!
சென்னை: ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் மறைந்த கேவி ஆனந்த் சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். பத்திரிகையாளராக, ஒளிப்பதிவாளராக இருந்து தன்னை இயக்குநராக உயர்த்திக் கொண்டவர் கேவி ஆனந்த்.
இவரது கோ, அயன், காப்பான், கவண் உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான வெற்றியை மட்டுமில்லாமல் சமூக அக்கறையும் கொண்டவை. இந்நிலையில் கோவிட் சமயத்தில் உடல் நலக்குறைவால் கேவி ஆனந்த் மறைந்தார். இவரது மறைவு கோலிவுட்டில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் கேவி ஆனந்த்: மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த், சூர்யா, விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். கோ, அயன், கவண், காப்பான் உள்ளிட்ட இவரது படங்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக மாறின. பத்திரிகையாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய கேவி ஆனந்த், தொடர்ந்து ஒளிப்பதிவாளராகவும் மாறி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து இயக்குநராகவும் பட்டையை கிளப்பியவர். கோவிட் காலத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கேவி ஆனந்த் உயிரிழந்தார். அவரது மறைவு கோலிவுட்டிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
கபிலன் வைரமுத்து: இந்நிலையில் தற்போது பிரபல பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து தன்னுடைய பேட்டி ஒன்றில் கே வி ஆனந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். கேவி ஆனந்த் இயக்கத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதில் முதல் படமாக அவர் சிம்பு கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவிருந்த படத்தை இயக்க ஆர்வம் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ராய் இணையவிருந்ததாகவும் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதே கேவி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்ததையும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

சிம்பு -ஐஸ்வர்யா ராய் காம்பினேஷன்: சிம்பு -ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் உருவாக இருந்தது அதை கேவி ஆனந்த் இயக்கவிருந்தது குறித்து தற்போது கபிலன் வைரமுத்துவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணி இணைந்திருந்தால் அந்த படம் கண்டிப்பாக கோலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தன்னுடைய படங்களில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார் கேவி ஆனந்த்.
சிறப்பான கேமரா கோணங்கள்: ஒளிப்பதிவாளராகவும் இருந்த இவர் தன்னுடைய படங்களில் மிகச்சிறப்பான இயற்கை காட்சிகளை மற்றும் கேமரா கோணங்களை பயன்படுத்தி இருந்தார். இவை அனைத்துமே இயக்குனராக மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் இவரது இறப்பு கண்டிப்பாக கோலிவுட்டிற்கு மிகப்பெரிய இழப்புதான். ஆனாலும் சில படங்களையே இயக்கியிருந்தாலும் அவை அனைத்துமே கேவி ஆனந்தின் திறமைக்கு சாட்சிகளாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications











