பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை
பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை.
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் உள்ளது. தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆன கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் வசித்து வருகிறார். புதுச்சேரியில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். தில் படத்தில் உன் சமையலறையில் பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கபிலன்.
2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில்" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார். ரஜினியின் காலா, பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை தற்போது வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
இவரது மகள் தூரிகை, இவர் ஆங்கில கட்டுரைகள் எழுதி வந்தவர். சமீப காலமாக பீஹிங் வுமன் என்கிற ஆங்கில இணையதளத்தை நடத்தி வந்தார், இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் இன்று மாலை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவரது தற்கொலை குறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











