Madhan karky: அவதார் மாதிரி புது உலகம்.. கங்குவா குறித்து மதன் கார்க்கி சிலிர்ப்பு!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

படம் கோடைக் கொண்டாட்டமாக அடுதத ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.
சூர்யாவின் கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. வரலாற்று பின்புலத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யாவை பார்க்க முடிகிறது.
இறுதிக்கட்ட சூட்டிங்: தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிங்கம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் அவர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் சூர்யாவின் போர்ஷன்கள் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாகவும் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடையவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கோடைக் கொண்டாட்ட ரிலீஸ்: படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 10 மொழிகளில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலும் படத்திற்கான டயலாக்கை எழுதுபவர்கள் இந்தப் படத்தின் மேக்கிங்கை பார்த்து வியப்படைந்துள்ளதாக படத்தின் தமிழ் வசனங்களை எழுதியுள்ள மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
அவதார் போன்ற புது உலகம்: படத்தின் சில காட்சிகளை தான் பார்த்ததாகவும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக உள்ளதாகவும் மதன் கார்க்கி தனது பேட்டியில் கூறியுள்ளார். படத்தில் சூர்யா மிகப்பெரிய அளவில் நடித்துள்ளதாகவும் தான் எழுதிய டயலாக்குகளை சிறிதும் மாற்றாமல் அதை பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். அவதார் படம் போல புது உலகத்தை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளதாகவும் அதில் புதிய கலாச்சாரம், புதிய கடவுள், புதிய வகை உணவுகள் ஆகியவற்றையும் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று கதைக்களத்தில் கங்குவா: தொடர்ந்து அஜித், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து கமர்ஷியல் ஹிட்களை கொடுத்து வந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்றுப் பின்னணியில் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான வகையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











