Kanguva : கங்குவா புதுமையானதாக இருக்கும்… மதன் கார்க்கியின் முதல் விமர்சனம்!

சென்னை : கங்குவா படத்தின் ஒரு சில காட்சிகளைப் பார்த்த மதன் கார்க்கி படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா இருக்கிறது.

lyricist madhan karky praises Suriyas kanguva movie

இப்படத்தில், சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கங்குவா : சூர்யா 42 படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து மொழி பார்வையாளர்களையும் கவரும் வகையில் கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் : ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மிலன் கையாள, படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார்.

மதன் கார்க்கியின் முதல் விமர்சனம் : இந்நிலையில், இப்படத்திற்கு வசனம் எழுதி பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டு போய் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார். கங்குவா படம் சிறுத்தை சிவாவின் மற்ற படங்களைப்போல இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கு. இப்படத்திற்காக சிவா அதிக உழைப்பை கொடுத்திருக்கிறார். படம் அருமையாக வந்திருப்பதோடு, ஒவ்வொரு வசனமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு அதிகம் : சிறுத்தை சிவா தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட ஒரு படமாக கங்குவா படம் இருக்கும் என்றும், இந்த படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பில் பல புதிய விஷயங்களை ரசிகர்கள் பார்க்கலாம் கங்குவா படத்தை மதன் கார்க்கி வெகுவாக புகழ்ந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கார்க்கி தற்போது படத்தை புகழ்ந்துள்ளதால்,படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X