Kanguva Audio Launch: பாகுபலி படம் போல இருக்கும்.. கங்குவா 10 பாகம் எடுக்கலாம்.. மதன் கார்கி பேச்சு!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா.ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து உள்ள இந்த படம் நவம்பர் மாதம் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய மதன் கார்க்கி கங்குவா படம் பாகுபலி படத்தை போல பிரம்மிப்பாக இருக்கும் என்றார்.

ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் எகிற வைத்தது.

kanguva audio launch surya

கங்குவா: இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதன் கார்கி, கங்குவா படத்தின் கதையை சிவா என்னிடம் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது, ஏன் கதை சொல்லும் போதே ரொம்ப பிரம்மாண்டமாக இருந்தது. இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா, வாய்ப்பு இருக்கா என்று தான் யோசித்தேன். அவ்வளவு பெரிய கனவை சிவா இன்று நினைவாக்கி இருக்கிறார். அவரின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசு இது.

மன்னிப்பு பிடித்த பாடல்: நான் சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் கூட நான் இணைந்த முதல் படம் இதுதான். இந்த படத்தில் நான் கங்குவா கங்குவா என்ற பாடல் ... தலைவன் என்ற பாடல் என 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். மன்னிப்பின் பவர் என்ன என்பதை உணர்த்தி உள்ளது. இந்த பாடலை கொடுத்த விவேகாவிற்கு என் மனமார்ந்த நன்றி என்றார்.

மனதிற்குள் மகிழ்ச்சி: தொடர்ந்து பேசிய அவர், பாகுபலி படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. கங்குவா பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது என் மதன் கார்கி அந்த விழாவில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X