Na Muthukumar: நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன்.. நா முத்துக்குமார் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர்!

சென்னை: கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா முத்துக்குமாரின் 7வது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

பல திரைப்படங்களில் நினைவில் நிற்கும் பாடல் வரிகளுக்கும் அதன் ஆத்மார்த்தமான உணர்வுகளுக்கும் சொந்தக்காரர் நா முத்துக்குமார்.

அவர் இல்லாதபோதிலும் அவரது பாடல் வரிகள் தற்போதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு சமீபத்திய உதாரணம் அநீதி படத்தில் நா முத்துக்குமாரின் பாடல்.

Lyricist Na Muthukumars 7th memorial day -Director Shankar remember on National award winner

நா முத்துக்குமார் குறித்து வருத்தம் தெரிவித்த ஷங்கர்: பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா முத்துக்குமாரின் 7வது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. பல பாடல்களின்மூலம் ஆத்மார்த்தமான உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியவர் நா முத்துக்குமார். தன்னுடைய பாடல்களின்மூலம் எளிமையான ரசிகனுக்கும் தான் சொல்லவந்ததை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய நா முத்துக்குமார் மரணமடைந்தாலும் அவர் விட்டுச் சென்ற பாடல்கள் வழி ரசிகர்கள் அவரை தொடர்ந்து நினைவில் வைத்துதான் இருக்கின்றனர்.

நா முத்துக்குமார் ஏராளமான படங்களின் சிறப்பான பாடல்களுக்கு வடிவத்தை கொடுத்தவர். இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் திரையுலகில் மேலும் அதிகமான சிறப்பான பாடல்களை கொடுத்திருப்பார் என்ற ஆதங்கத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் கொடுத்து வருபவர். அவர் இறந்தாலும் அவரது பாடல் வரிகள் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் அநீதி படம்.

அர்ஜூன்தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது அநீதி. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கர் பெற்றிருந்தார். இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக கடந்த மாதத்தில் நடந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், இந்தப் படத்தில் நா முத்துக்குமாரின் கவிதை வரிகள் பாடலானது குறித்து பாராட்டு தெரிவித்தார்.

Lyricist Na Muthukumars 7th memorial day -Director Shankar remember on National award winner

நா முத்துக்குமார் இல்லாதது குறித்தும் வேதனை தெரிவித்த ஷங்கர் அவரது பாடல்களை கேட்கும் தான் அவரை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்திருந்தார். ஜிவி பிரகாஷ்குமார் இசையில் நா முத்துக்குமாரின் வரிகளில் திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் யாமினி நா முத்துக்குமாரின் இந்த வரிகளுக்கு சிறப்பாக உயிரூட்டியுள்ளனர். இறந்தும் நம்முடன் வாழ்ந்துவரும் நா முத்துக்குமாரின் பாடல்கள் மட்டுமில்லாமல் கவிதைகளும் தற்போது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

தங்கமீன்கள், சைவம் போன்ற படங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தேசிய விருதை பெற்றிருந்தார் நா முத்துக்குமார். இந்நிலையில் அவர் இறந்த பின்பும் அவரது பாடல்களுக்கு தமிழக அரசின் 3 விருதுகளை பெற்றிருந்தார். அதை அவரது குழந்தைகள் ஆதவன் மற்றும் மகாலட்சுமி பெற்றுக் கொண்டனர். தான் மரணித்த நிலையிலும் தன்னுடைய எழுத்தால், தொடர்ந்து தன்னுடைய இருப்பை தொடர்ந்து வருகிறார் நா முத்துக்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X