பாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்
சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணனுடன் தான் நடிக்கவில்லை என்று பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நடிக்கிறார். மற்றும் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பாடல் காட்சி
இந்தப் படத்தின் பாடல் காட்சி கடந்த மாதம் படமாக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்றனர். இதற்காக ரூ.10 கோடி செலவில் அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

ஆக்ஷன்
இந்தப் படத்துக்காக லேப் செட் அமைத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ஷன் காட்சிகள் டமாக்கப்பட்டன. அனல் அரசு மாஸ்டர் இந்தக் காட்சியை அமைத்தார். சுமார் 25 சண்டைக் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

பாடலாசிரியர்
இந்நிலையில், இந்தப் படத்தில் சரவணனுடன் பாடலாசிரியர் பா.விஜய்யும் நடிக்கிறார் என்று செய்து வெளியானது. பா.விஜய், ஞாபகங்கள், இளைஞன், ஸ்டாபெர்ரி, ஆருத்ரா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தவறானத் தகவல்
இதுபற்றி அவரிடம் கேட்டபோது மறுத்தார். அந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதுகிறேன். இதற்காக இயக்குனர்களை சந்தித்தேன். அவ்வளவுதான். அதில் நான் நடிப்பதாக, தவறானத் தகவல் வெளியாகியுள்ளது. நான் நடிக்கவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











