பாடல்களை பெற்று கொண்டு மிரட்டுகிறார்: ரூ.10 கோடி கேட்டு பிரபல நடிகருக்கு பெண் பாடலாசிரியர் நோட்டீஸ்!

சென்னை: பாடல்களை பெற்றுக்கொண்டு பிரபல நடிகர் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ள பிரபல பெண் பாடலாசிரியர் 10 கோடி ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா. இவர் பிரபல இயக்குநரான மீரா நாயரின் மான்சூன் வெட்டிங் படத்தின் மூலம் இந்தி திரையுலகுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து, டி, தர்னா ஸரூரி ஹைய், ரிஸ்க், ரூ பா ரூ, கர்மா ஆர் ஹோலி, லவ் கிச்டி, ஜனத் 2, ஜிஸ்ம் 2, ஹீரோயின், மர்டர், பாம்பே டாக்கிஸ், ஹைவே, கிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ராதே படம்

கடைசியாக ராதே படம்

கடைசியாக அவரது நடிப்பில் ராதே படம் வெளியானது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் ரேட் ஆன் எ ஹைவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2010ஆம் ஆண்டு இந்தியாவின் மோஸ்ட் அட்ராக்ட்டிவ் பர்சன்ஸ் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட 50 பேர் கொண்ட பட்டியலில் ரந்தீப் ஹூடா 21வது இடத்தை பெற்றார்.

சுஷ்மிதா சென்னுடன் காதல்

சுஷ்மிதா சென்னுடன் காதல்

ஐஎம்டிபி வெளியிட்ட உலகளவில் செக்ஸியான ஆண்கள் என்ற 20 பேர் கொண்ட பட்டியலில் 7 வது இடத்தை பிடித்தார் ரந்தீப் ஹூடா. ரந்தீப் ஹுடா முன்னாள் மிஸ் யூனிவர்ஸான சுஷ்மிதா சென்னுடன் காதல் உறவில் இருந்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்தனர்.

காதல் முறிவு - சிறப்பான சம்பவம்

காதல் முறிவு - சிறப்பான சம்பவம்

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தங்களின் உறவை முறித்துக் கொண்டனர். சுஷ்மிதா சென் உடனான காதல் முறிவு குறித்து பேசிய ரந்தீப் ஹூடா, இந்த காதல் முறிவுதான் என் வாழ்க்கையில் நடந்த சிறப்பான சம்பவம் என்றார். என் வாழ்க்கையில் அதற்காக நிறைய நேரத்தை செலவழித்ததை உணர்ந்துவிட்டேன். இப்போது எனக்கான வேலைகளில் கவனம் செலுத்துவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

பெண் பாடலாசிரியர் புகார்

பெண் பாடலாசிரியர் புகார்

இந்நிலையில் நடிகர் ரந்தீப் ஹூடா மீது பிரபல பெண் பாடலாசிரியர் பகீர் புகாரை கூறியுள்ளார். அதாவது, ஹிசார் படத்தின் திரைக்கதை எழுத்தாளரும் பாடலாசிரியருமான பிரியங்கா ஷர்மா தனது வழக்கறிஞர் ரஜத் கல்சன் மூலம் நடிகர் ரன்தீப் ஹூடாவுக்கு ரூ .10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஹரியான காவல் துறையில் புகார்

ஹரியான காவல் துறையில் புகார்

ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஃப் ஃபரிதாபாத்தின் ரேஞ்ச் கமிஷனருக்கு அவர் இந்த விவகாரத்தில் புகார் அனுப்பியுள்ளார். பிரியங்கா சர்மா தற்போது சூரத்தில் திரைக்கதைகள், கதைகள் மற்றும் திரைப்படங்களுக்கான பாடல்களில் பணிபுரிந்து வருவதாகவும் வழக்கறிஞர் ரஜத் கல்சன் கூறியுள்ளார்.

1200 பாடல்கள்.. 40 கதைகள்..

1200 பாடல்கள்.. 40 கதைகள்..

அவர் நடிகர் ரந்தீப் ஹூடாவுக்கு அனுப்பிய நோட்டீஸில், பிரியங்கா ஷர்மா சமூக ஊடகங்கள் மூலம் அவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். ரந்தீப் ஹூடா விரைவில் பிரியங்காவின் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்குவார் என்று உறுதியளித்தார். இதனால் பிரியங்கா ஷர்மா, ரந்தீப் ஹூடா, ஆஷா ஹூடா, மன்தீப் ஹூடா, அஜ்லி ஹூடா, மணீஷ், ரந்தீப்பின் மேலாளர் பாஞ்சாலி சவுத்ரி, ஒப்பனை கலைஞர் ரேணுகா பிள்ளை ஆகியோருக்கு சுமார் 1,200 பாடல்கள் மற்றும் 40 கதைகளை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ. 10 கோடி இழப்பீடு வேண்டும்

ரூ. 10 கோடி இழப்பீடு வேண்டும்

மேலும் ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஸ்க்ரிப்ட்டுகளில் வேலை செய்யும் பணியை தொடங்கவில்லை. மேலும் பாடல்களையும் திருப்பி அனுப்பவில்லை. ஸ்கிரிப்டுகள் மற்றும் பாடல்களைத் திரும்ப பேட்டு அவர்களை தொடர்பு கொண்டபோது, ​பிரியங்கா ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் பிரியங்கா சர்மா கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு நேர்ந்த துன்புறுத்தலுக்கு ரூ .10 கோடி இழப்பீடும் அந்த நோட்டீஸ் மூலம் கேட்டுள்ளார்.

8 ஆண்டுகளாக துன்புறுத்தல்

8 ஆண்டுகளாக துன்புறுத்தல்

பிரபல நடிகரான ரந்தீப் ஹூடா கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல பெண் பாடலாசிரியர் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகர் யோ யோ ஹனி சிங் தன்னை துன்புறுத்துவதாக புகார் அளித்த அவரது மனைவி 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X