உங்க முயற்சி இங்கே பலிக்காது - பி.ஜே.பி-க்கு எதிராகப் பொங்கும் பாடலாசிரியர்

By Vignesh Selvaraj

சென்னை : பா.ஜ.க-வினரின் பிரித்தாளும் சதி இங்கே நடக்காது என பாடலாசிரியரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் விஜய் படத்தோடு ட்வீட் செய்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்த வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த வசனங்களை நீக்கினால்தான் தொடர்ந்து திரையிட முடியும் எனவும் மிரட்டல் விடுத்தனர்.

ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்

பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என தனது ட்வீட்களில் குறிப்பிட்டு வந்தார். ஜோசப் விஜய் என பெயர் இருக்கும் விஜய்யின் வாக்காளர் அட்டையைப் பதிவிட்டு 'உண்மை கசக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க-வினரின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் பா.ஜ.க-வினரின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இங்கே நடக்காது

பா.ஜ.க-வினரின் மதச்சாயம் பூசும் முயற்சிகளால் பலரும் கொதித்து வருகின்றனர். பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ், 'பிரித்தாளும் சதி இங்கே நடக்காது இனி.. #WeLoveJosephVijay என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ யாம் ஜோசப்

ஐ யாம் ஜோசப்

பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள், தமிழ் சினிமா ஆர்வலர்கள் பலரும் ஜோசப் என தங்களது பெயருக்கு முன்னே சேர்த்து ட்விட்டர் பெயரை மாற்றியுள்ளனர். #IAmJoseph எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. பா.ஜ.க-வினரின் மதப் பிரச்சாரத்திற்கு எதிராக ரசிகர்கள் கிளம்பியுள்ளனர்.

மனதால் ஒன்றிணைவோம்

'தமிழன் என்று சொன்னால் மனதால் ஒன்று அடைவோம் . இது தெரியாமல் சிலர் புலம்பிக்கொண்டு திரிகிறார்கள். என ஒரு ரசிகர் எம்மதமும் சம்மதம் எனும் கொள்கையைக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X