திருடுபோன தாலி...வருத்தப்பட்ட சினேகன் மனைவி...என்ன இப்படி ஆகிப்போச்சு?

சென்னை : பாடலாசிரியர் சினேகன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் உள்ளார்.

அவரை பிரிந்து உள்ள அவரது மனைவி கன்னிகா, தனது யூடியூப் பக்கத்தில் தனது தாலி குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

சிறப்பான பல பாடல்களை எழுதியுள்ள சினேகன், தனது நீண்டநாள் காதலி கன்னிகாவை மனமுடித்துள்ளார்.

பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர் சினேகன் சினிமாவில் பல சிறப்பான பாடல்களை எழுதியுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொள்ளும்வரையில் யாருக்கும் பரிட்சயமில்லாமல் இருந்தார். அந்த நிகழ்ச்சி இவரை தற்போது பிக் பாஸ் அல்டிமேட் வரையில் கொண்டு வந்துள்ளது. இவரது நடவடிக்கைகளை பிக்பாஸ் அல்டிமேட்டில் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

கன்னிகாவை மணந்த சினேகன்

கன்னிகாவை மணந்த சினேகன்

பிக் பாஸ் மூலம் பிரபலமான இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நீண்டநாள் காதலியான நடிகை கன்னிகாவை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருடைய காதல் உள்ளிட்டவை குறித்து கன்னிகா தனது யூடியூப் பக்கத்தில் அதிகப்படியான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

தீபத் திருநாளில் ஒப்புதல்

தீபத் திருநாளில் ஒப்புதல்

சினேகன் தான் முதலில் தனது காதலை கன்னிகாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிலளிக்க 5 மாதங்களை எடுத்துக் கொண்டாராம் கன்னிகா. மேலும் ஒரு கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அந்த வெளிச்சத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கன்னிகா.

திருட்டுப் போன தாலி

திருட்டுப் போன தாலி

அந்த சந்திப்பின்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் தனது காதலை தெரிவித்துள்ளார். அந்த தாலியை நீண்ட காலங்கள் பத்திரமாக வைத்திருந்துள்ளார் கன்னிகா. ஆனால் அந்த தாலி திருட்டு போய் விட்டதாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில், ரசிகர்களும் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிறப்பான ஜோடி

சிறப்பான ஜோடி

சினேகன் மற்றும் கன்னிகா ஜோடி கடந்த ஆண்டு ஜூலை 29ல் திருமணம் செய்துக் கொண்டது. தொடர்ந்து இந்த ஜோடி கோலிவுட்டில் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகிறது. இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X