குழந்தைகள் பிறந்த சில தினங்களிலேயே வொர்க்-அவுட்டுக்கு திரும்பிய கன்னிகா.. சினேகன் கொடுத்த பரிசு!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் சிறப்பான பாடலாசிரியராக அறியப்படுபவர் சினேகன். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே இவர் பரவலாக ரசிகர்களின் அதிகமான அறிமுகத்தை பெற்றிருந்தார். மேலும் தன்னுடைய நீண்டநாள் காதலி கன்னிகாவையும் இவர் மணமுடித்திருந்தார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பொதுவெளிகளிலும் இந்த ஜோடி அதிகமான கவனத்தை பெற்று வந்தது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த அழகான தருணங்களை அடுத்தடுத்து சமூக வலைதளங்களின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

பாடலாசிரியர் சினேகன்: பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் சினேகன். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றதன்மூலம் ஏராளமான ரசிகர்களை இவர் சென்றடைந்துள்ளார். ஏராளமான சிறப்பான பாடல்களை இவர் எழுதியுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தன்னுடைய நீண்டநாள் காதலி கன்னிகாவை திருமணம் செய்துக் கொண்டார். தங்களது காதல் பயணம் சிறப்பாக தொடர சில காலங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டதாக இவர்கள் தங்களது பேட்டியொன்றில் கூறியுள்ளனர்.
கன்னிகாவிற்கு இரட்டை குழந்தைகள்: இதனிடையே சினேகன் தன்னுடைய மனைவி கன்னிகா கர்ப்பம் குறித்து கடந்த ஆண்டில் அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பகாலத்தில் இவர்கள் இருவரின் அன்னியோன்னியம், கன்னிகாவின் வளைகாப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் சமூக வலைதளங்கள்மூலம் வெளியான நிலையில், இந்த ஜோடி குறித்து ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகம் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னிகாவிற்கு அழகான இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த சம்பவத்தையும் சினேகன் வீடியோ பதிவாக வெளியிட்டிருந்தார். மேலும் தன்னுடைய மனைவி கன்னிகாவிற்கு ஐபோன் பரிசளித்த வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
மீண்டும் வொர்க்-அவுட்: இந்நிலையில் இவர்களின் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. எப்போதுமே தன்னுடைய டயட் மற்றும் வொர்க் அவுட்டில் மிகவும் கவனமாக இருக்கும் கன்னிகா, தற்போது குழந்தைகள் பிறந்த சில தினங்களிலேயே தன்னுடைய இயல்பான வொர்க் அவுட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காலையில் எழுந்து வொர்க் அவுட்டிற்கான உடை, ஷு உள்ளிட்டவற்றை அணிந்துக் கொண்டு அதை மேற்கொள்ள செல்லும் கன்னிகா அதை முடித்து விட்டு திரும்புவதாகவும் இதையடுத்து காபியுடன் அவரை சினேகன் எதிர்கொள்வதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.
கன்னிகாவிற்கு சினேகன் பரிசு: இருவரும் காபியை சுவைக்கும் சூழலில், தன்னுடைய காதல் மனைவி கன்னிகாவிற்கு சினேகன் அன்புடன் நெற்றியில் முத்தம் கொடுப்பதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. மிகவும் அன்னியோன்னியமாக அடுத்தடுத்த செயல்பாடுகள் மூலம் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றவரும் இந்த ஜோடி, அழகான தம்பதி என்ற தளத்திலிருந்து சிறப்பான பெற்றோராக அடியெடுத்து வைத்துள்ளனர். சமீபத்தில் இவர்களின் குழந்தைக்கு கமல்ஹாசன் பெயர் வைத்ததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











