ஹேப்பி பர்த்டே சினேகன்..திரை பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : தமிழில் பல படங்களில் பாடலாசிரியராகவும் ஒரு சில படங்களில் நடிகராகவும் தமிழ் மக்களால் பெரிதும் அறியப்பட்ட சினேகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

Recommended Video

Lyricist Snehan | பசிக்கொடுமைதான் உலகிலேயே கொடூரமானது-பாடலாசிரியர் சிநேகன்-வீடியோ

இன்று இவரது பிறந்தநாளையொட்டி அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

ஜூன் 23 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

எழுத்துக்களின் மூலம்

எழுத்துக்களின் மூலம்

தமிழ் திரைப்படத்துறையில் பல முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப் பாடல்களை தனது எழுத்துக்களின் மூலம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்
சினேகன். புத்தம் புது பூவே-வில் தொடங்கிய இவரது பாடல் வரிகள் தற்பொழுது சூரரைப்போற்று வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

இவ்வாறு காலத்திற்கு ஏற்றார் போலும் நடிகர்களுக்கு ஏற்றார் போலும், கதைகளுக்கு ஏற்றார் போலும், தமிழ் எழுத்துக்களின் மூலம் அவர்களுக்கு தன்னுடைய பாடல்களை எழுதி வழங்கிய இவர் விஜய், சூர்யா, சிம்பு, கார்த்தி மற்றும் தனுஷ் என பல நடிகர்களுக்கு அவர்களது படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

கைகொடுக்கவில்லை

கைகொடுக்கவில்லை

புத்தம் புது பூவே படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக தொடங்கிய இவருக்கு அந்த படம் சரியாக கைகொடுக்காத நிலையில், இயக்குனர் சேரன் இயக்கிய குடும்பங்களை கொண்டாடும் பாண்டவர் பூமி படத்தில் தனது வரிகளின் மூலம் அனைவரையும் அசத்தி யாருடா இந்த பாட்ட எழுதின பாடலாசிரியர் என அனைவரையும் கேட்க வைத்தவர்.

பாண்டவர் பூமி

பாண்டவர் பூமி

அவ்வாறு இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த பாண்டவர் பூமி படத்தில் வரும் "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" பாடல் மற்றும் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்" பாடலும் இவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிகப்பெரிய திருப்புமுனையான பாடல்களாகும்.

உயர்திரு 420

உயர்திரு 420

இவ்வாறு பாடல் வரிகளின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்த சினேகன் அதோடு மட்டுமல்லாமல் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இயக்குனர் அமீர் நடித்த யோகி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சினேகன் பின்பு உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார்.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

இவ்வாறு தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு தனது வெற்றி ஏணி படியில் பயணித்து கொண்டு போன சினேகன் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒரு பங்கேற்பாளராக கலந்துகொண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து பலரின் மனங்களையும் வென்று வந்தார்.

திறமையாக விளையாடி

திறமையாக விளையாடி

இவ்வாறு இவர் கலந்துகொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் இவர் தனது சிறப்பான திறமையால் மிகவும் திறமையாக விளையாடி இந்த நிகழ்ச்சியில் ரன்னராக வந்து அனைவரையும் மகிழ்ச்சி படுத்தியிருந்தார்.

நடிகராகவும்

நடிகராகவும்

இவ்வாறு நம் அனைவரையும் பாடலாசிரியராகவும், நடிகராகவும் வந்து நம் அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்த சினேகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஜூன் 23 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் சினேகன் அவர்களுக்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X